பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆器母 வாய்மொழியும் வாசகமும் பெரும் புகழ் பொருந்திய ஆயிரந் திருநாமங்களையுடைய வனாதலால் எந்த விருத்தத்திலும் எளிதாகத் திருநாமங் களையிட்டுக் கவி பாடுவதற்குரியவனாகின்றான். ஆக இப்படிப்பட்ட எம்பெருமானை அல்லது மற்றொரு தாழ்ந்த புருஷனை என் வாயினால் நான் துதிக்க மாட்டேன்; அவரவர்கள் நரஸ்துதி செய்வதெல்லாம் பச்சைப் பசும் பொய்யே அல்லது வேறில்லை' என்று காட்டுகின்றார் பின்னடிகளில், கொடுக்கின்ற கைம்முதல் சிறிதுமில்லாத ஒருவனை நோக்கி மாரியனைய கையான் இவன் என்றும் கொடையை நினைத்துத் தேம்புகின்ற தோளுடையானைக் குறித்து மால்வரையொக்கும் திண் தோளன் இவன் என்றும் கவி பாடுவதெல்லாம் மெய்யுரை சிறிதும் கலவாத பொய்யுரையேயாம் (unadulterated lie}; இத்தகைய பொய்யுரைகளில் தான் பிரவேசிக்கத் தக்க சக்தனல்லன் என்கின்றார். அசாரமான திருண்விசேடத்தைப் பற்றை என்பர். அது போன்றவன் என்னாமல் அதுவாகவே சொன்னது முற்றுவமை. முளைத்தெழுந்து தீய்ந்து போவன சிலதுாறு உண்டாயிற்று; அது போல, பிறந்தவன்று தொடங்கி முடிந்து போமளவும் ஒரு காரியத்திற்கு உதவாத வர்கனைப் பற்றை என்கின்றது” என்பர் நம்பிள்ளை. இத்தகைய கருத்துகளையே நம்பியாரூரரும், நலமி லாதானை நல்லனே என்று நரைத்த மாந்தரை இளையனே குலமி லாதானைக் குலவனே என்று கூறினும்கொடுப் பாசிலை (6) நோயனைத்தடங் தோளனே என்று கொய்யமாக்தரை விழுமிய தாயன் றோபுலவோர்க்கெலாம் என்று சாற்றினும்கொடுப் பாரிலை (?)