பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை மறைமுடியின் சாரம் 147 விட்டான் பார்த்தசாரதி. அதுதான் பிரம்மவித்தைச் பிரம்ம ஞானம். சாதாரண மனிதனுக்குப் பிரம்ம ஞானம் வெறும் கொள்கையளவில் நின்று விடலாம். அதனால் அவனுக்கு நன்மையொன்றும் நேரிடாது. வாய் வேதாந்தம் என்பது இதுவேயாகும். பிரம்மஞானம் முற்றிலும் வாழ்க் கைக்கு உரியது. ஒவ்வொருவரும் அதனைத் தம் வாழ்க்கை யில் அநுட்டானத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும். இதனால் அது யோக சாத்திரம் என்ற பெயரைப் பெது கின்றது. கீதையின் தத்துவம் தெரிந்திருந்தால் கூவி வேலை செய்பவனும் தன் வேலையைத் திறம்படச் செய்வான். பயிர்த் தொழில் செய்பவனுக்குக் கீதையின் கோட்பாடுகள் தெரிந்திருந்தால் அவன் சிறந்த உழவனாகத் திகழ்வான். வாணிகம் செய்வோன் இக்கோட்பாடுகளை நன்கு அறிந் திருந்தால் அவன் சிறந்த வணிகனாகத் திகழ்வான். அரசு அலுவலர் கீதையின் தாத்பர்யத்தை நன்கு தெரிந்திருந்தால் அவர் தம் கடமையைத் திறமையுடன் நிறைவேற்றுவார். பள்ளியாசிரியர்கள் கீதையின் கோட்பாடுகளை அறிந்து கொண்டால் அவர்கள் சிறந்த ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும். கீதையை அநுட்டிப்போர் மேலானவராகத் திகழ்வர். திறமை வாய்க்கப் பெற்றவர்கள் யோகியர் என்ற பெயரையும் பெறுகின்றனர். கீதையின் தனிச்சிறப்பு : பகவத் கீதை ஒரே சமயத்தில் சுருதியாகவும் சுமிருதியாகவும் வழங்குவதால் அது தனிச் சிறப்புக்குரியதாகின்றது. செவி வழியாகக் கேட்டுக் காப் பாற்றி வைக்கப்பட்டது சுருதி. உபநிடதங்கள் யாவும் சுருதி என்ற பெயரைப் பெறுகின்றன. நெடுங் காலமாகக் கேட்டு வந்தாலும் சுருதி அமைப்பு மாறாது உள்ளது. ஆதலால் அதன் பொருள் அமைப்பும் திரிபு ஏற்படா துள்ளது. கணிதத்தில் எண் சுவடியையும் அறிவியலில் வாய் பாடுகளையும் (Formia) யாரும் மாற்ற முடியாதனவாக இருப்பதுபோல் சுருதிப் பொருளையாரும் மாற்ற முடியாது. மெய்ப்பொருளை விளக்கும் சுருதிமொழியும்