பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதை - மறைமுடியின் சாரம் 芷嘉岛、 இங்கு உணர்வு (பிரக்ஞை) ஒன்றைத் தவிர ஏனையவை மறைந்து விடுகின்றன. எல்லாதிலைகட்கும் பொதுவாகிய உணர்வு ஒன்றே எஞ்சியிருப்பது, இதுவே அத்வைததிலை. இந்த மூன்று நிலைகளும் அஞ்ஞானத்தில் இருப்பனபோல் ஞானத்திலும் அமையக் கூடியவை. இவற்றுள் எது சாதனம், எது சாத்தியம் என்பவைபற்றியே சமயவாதி களிடம் நிலவும் சச்சரவுகள் . இறைவனது இயல்பு : பரம்பொருள் மனம் மொழி இவற்றிற்கு எட்டாதது.அஃது இந்த அகிலமாக வடிவெடுக்கு மிடத்து அதனை சத் சித் ஆனந்தம் என்று சொல்லலாம். சொல்லற் ரிய பொருளை ஒரு சொல்லால் விளக்குமிடத்து சச்சிதானந்தம் என்பதற்கு நிகரான சொல் வேறு ஒன்றும் இல்லை. சத் என்பதற்கு உள்ளது என்பது பொருள். காலத் தாலும் இடத்தாலும் செயலாலும் மாறுபடாதிருப்பது பரம்பொருள். இதே சத் பொருள் காலத்தாலும் இடத்தா லும் செயலாலும் தன்னை விளக்கிக் கொண்டிருக்கும். போது அஃது எண்ணிறந்த சீவ கோடிகளாகக் காட்சியளிக் கின்றது. சீவான்மா தோற்றத்துக்கு வந்துள்ள நிலையில் கர்மமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். கர்மத்திற்கு அடிப் படையாயிருப்பது சங்கற்பம். வாழவிரும்புதல் முடிந்த சங்கற்பம். சீவர்கள் எக்கர்மத்தைப் புரிந்தாலும் அதன் மூலம் வாழ்ந்து நிலைத்திருத்தல் என்பதை நிலைநாட்ட முயல்கின்றனர். அதாவது தம்முடைய உண்மைநிலை யாகிய சத் சொரூபத்தை நிலைநாட்டவே சீவ கோடிகள் கர்மம் புரிகின்றனர். ஆக, கீதையின் முதல் ஆறு இயல்களும் சத் சொரூபத்தை விளக்குவதாக அமைகின்றது. உயிர்கள் கர்மம் புரிகின்றன. உயிர்களிடம் உணர்ச்சி உண்டு. உணர்ச்சியும் உயிர் வாழ்க்கையும் இண்ை பிரியாதவை. உணர்ச்சி விதவிதமான வடிவம் கொள்ளு கின்றது. விருப்பு, நட்பு, ஆசை போன்ற உடன்பாட்டு உணர்ச்சிகள் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. வெறுப்பு. பகை, சினம், பொறாமை போன்ற எதிர்மறை உணர்ச்சி