பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷莎逻 வாய்மொழியும் வாசகமும் இந்த நெறியைக் கடைப்பிடிக்க வல்ல அதிகாரிகளாவர். மனநிலை மாறி எம்பெருமானின் கருணையின் மீது பெரு நம்பிக்கை கொள்வதே இந்நெறியைக் கடைப்பிடிப் போரிடம் வேண்டப் பெறுவது. மணிவாசகர் பெருமான் திருவாசகத்தில் அடைக்கலப்பத்தில் குறிப்பிடுவது இந்த நெறியேயாகும். இதில் ஒரு பாடல்: பொழிகின்ற துன்பம் புயல்வெள்ளத்தில் கின் கழல் புணைகொண்டு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்:யான் இடர்க்கடல்வாய்ச் சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமம் சுறவு எறிய அழிகின்ற னன் உடை யாய்அடி யேன் உன் அடைக்கலமே (409) துன்பக் கடல் என்னும் மண் உலகுக்கு வந்த பக்தர்கள் இறைவன் திருவடி என்னும் தெப்பத்தைக் கொண்டு முக்தி என்னும் கரை ஏறினர். அடியேனாகிய எளியேன் பிறவிப் iெருங்கடலில் தோன்றும் பெண் உடம்பு முதலிய பேரலை கள் மோத, காமம் என்னும் சுறாமீன் தாக்க நைந்து அழிகின்றேன். எளியேனை அடிமைப் பொருளாக உடைய வனே! நின்திருவடிக்கு அடைக்கலம்' என்கின்றார். இதில். இன்னொரு பாடலில், எளியேனை அடிமைப் பொருளாக உடையவனே! செழுமையாகத் திரண்ட செந்தாமரையின் மலரையொத்த நின் திருவடியினை நின் திருவருளால் செவ்வி வாய்ந்த மெய்யடியார் சேரப் பெற்றனர்; அவர்கள் அன்பாற் கனிந்த இன்ப உள்ளத்த ராயினர். அவர்கள் நின் திருவாணைப்படி நீ எழுந் தருளியதும் உடன் போயினர். அப்பெரும் பேறு வாய்க்காத பாவியேனாகிய அடியேன் அளவில்லாத புழுக்களுக்கு இட மாகவுள்ள தாழ்ந்த இந்த உடம்பினைப் பெற்றவனாக உள்ளேன். நின் திருவடியுணர்வு வாயிலாகிய கல்வி உணர்வு