பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி 179 விதி. இதனைத் துவயமந்திரத்தால் அறியலாம். "துவயம் பெரிய பிராட்டியாராலே பேறென்கிறது-இவள் புருஷகார மானால் அல்லது ஈசுவரன் காரியம் செய்யான் என்கை' (118, 119) என்ற முமுட்சுப்படி வாக்கியங்களாலும் இதனைத் தெளியலாம். பெரிய பிராட்டியாரோடு கூடிய எம்பெருமானின் திருவடிகளை உபாயமாகப்பற்றுகின்றேன்" என்பது பூரீமந் நாராயண சரணெள' என்பதன் பொருளாகும். 'அகலகில்லேன் இறையும்” என்று அலர் மேல் மங்கை உறை மார்பன்' என்பது நம்மாழ்வாரின் அமுதவாக்கு. பகவான் எங்ங்னம் உபேயப் பொருளோ அங்ங்னமே பிராட்டியாரும் உபாயப் பொருள் என்பது தேறி நிற்கும் கருத்தாகும். பிராட்டியார் எம்பெருமானை விடாது பற்றியிருப்ப தற்குக் கரரணம் என்ன? என்ற வினா எழுசின்றது. ஈசுவரன் எதையும் தன் இச்சையினால் செய்பவன்; சேதநன் எண்ணிறந்த குற்றங்களையுடையவன். பிராட்டியார் எம்பெருமானின் சுதந்திரத் தன்மையையும் சேதநனின் அளவற்ற குற்றங்களையும் கண்டு எ ன் ன ா க ப் போகின்றதோ?’ என்று அஞ்சி எம்பெருமானை ஒரு நொடி யும் விட்டுப் பிரியாமல் இருக்கின்றார். உலகத்தாரைப் போன்றல்லாமல் ஈசுவரன் குற்றங்களுக்கேற்பச் சேதநனைத் தண்டிக்க ஊன்றி நிற்கின்றான். சேதநனோ அளவற்ற குற்றங்களைச் செய்தவனாயும் செய்கின்றவனாயும் இருக் கின்றான். கடின சித்தமுடைய நாயகனையும், குறும்பு நிறைந்த துடுக்கான மக்களையும் பெற்ற ஓர் இல்லத்தரசி எங்ஙனம் அவர்களை விட்டுத் தன் தாய் வீடு செல்ல மாட்டளோ அங்ங்னமே குற்றத்திற்கேற்ற தண்டனை அளிப்பதில் ஊன்றி நிற்கும் கணவனையும் குற்றங்களையே செய்து போகும் துட்டராகிய மக்களையும் பெற்ற பெரிய பிராட்டியாரும் எம்பெருமானை விட்டுப் பிரிய மாட்டார் என்பது தத்துவம்.