பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரணாகதி நெறி - 18; திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்வதற்கு உட்கருத்து ஒன்று உண்டு. தாம் பிரியும் காலமும் சேதநன் ருசியோடு வந்து ஈசுவரனைப் பற்றும் காலமும் ஒன்றா யிருப்பின் என் செய்வது? அப்பொழுது சேதநன் கதி என்னாகும்?' என்று கருதியே பிராட்டியார் அத்திரு மார்பில் நித்திய வாசம் செய்கின்றார். மக்களுக்கு இறைவனும் இறைவியுமான சம்பந்தம் உண்டு என்பதை நாம் அறிவோம். அப்படியிருக்க இவர் புருஷகாரமாக அமைவதற்குக் காரணம் ஒன்று உண்டு. சேதநன் எம்பெருமானுக்குச் சேஷபூதன்-அதாவது அடிமை யாக இருப்பவன்-என்பதையும், எம்பெருமான் சேததனுக்கு சேஷி-அதாவது தலைவன்-என்பதையும் நாம் அறிதல் வேண்டும். ஆயினும், பிராட்டி தாயாம் தன்மையால் வந்த வாத்சல்பதை மிகுதியாக உடையவர்: தந்தையாகிய எம்பெருமானைப்போல் வன்மையும் .ெ ம ன் ைம யு ம் கலந்திராமல் மென்மையே வடிவு கொண்டவர். பிறர் கண் குழிவு காணமாட்டாத தன்மையர், தீய மனமுடையவர் களையும் மருவித்தொழும் மனமுடையவர்களாவதற்குத் தக்சு செயல் புரிபவர். குற்றமுடையவர்களும் கூசாமல் காலில் விழலாம்படி இருப்பவர். ஆண்மையால் வந்த வன்மையோடே தந்தையால் வந்த நலம் செய்யும் நன்மை புடையவனாயும் குற்றங்களைப் பத்துப் பத்தாகக் கணக் கிட்டுக் கொடிய தண்டனைகளை விதிக்கும் செய்கையாலே, குற்றமுடையவர்கள் முன்செல்லக் குடல் கரிக்கும்படி இருக்கும் சர்வேசுவரனைத் தக்க வழிகளாலே குற்றங்கள் அனைத்தையும் மறைப்பித்துச் சேர்ப்பிக்கும் தன்மை ஆடையவர். இத்தகையவர் பாவமே செய்து பாவிகளான மக்கள் சர்வேசுவரனைப் பற்றுங்கால் புருஷகாரமாக வேண்டும் என்பது மணவாளமாமுனிகளின் கருத்தாகும். இதனைப் பிள்ள உலக ஆசிரியர்,