பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

忍器岛 வாய்மொழியும் வாசகமும் மூன்று எழுத்துகளிலும் உகரங்கள் வருகின்றன. இவற்றுள் அமைந்திருக்கும் காக்கும் எழுத்தாகிய உகரமே சிறந்தது என்று சொல்வர் பெரியோர். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான், உலகெலாம் உணர்ந்து ஒதற் கரியவன்" என்ற 'உ'கரத்தை முதல் எழுத்தாகக் கொண்டு தொடங்குகின்றார். கம்பரும், 'உலகம் யாவையும் தாம்.உள் வாக்கலும்’ என்று 'உ'கரத்தை ஆதியாகக் கொண்ட தன் இராம காதையைத் தொடங்குகின்றார். நக்கீரரும், . . . உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு என்று 'உ'கரத்தை முதலாகக் கொண்டே திருமுருகாற்றுப் படையைத் தொடங்குகின்றார். இவற்றால் உகரத்தின் பெருமை உயர்ந்து நிற்பது தெரிய வருகின்றது. நம்மைக் காக்கும் கடவுளாகிய முருகன் மன இருள், அறியாமை, துன்பம் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கின்றான் என்பதைச் சூ ச க ம .ா க அறிய முடிகின்றது. வினைகளைப் போக்கும் வேலுடனும், அச்சத்தைப் போக்கும் மயிலுடன் சேவற்கொடி பறக்கும் தம் அருளாட்சியை நடத்துகின்றான் செவ்வேள். - : முருகவேளின் திருமேனியின் அழகும் சொல்லுத் தரமன்று. அழகிற்குக் குழந்தை முருகனையும், குழந்தைக் கண்ணனையும் உவமைகளாகக் கையாளும் மரபும் உண்டு. “முருகு என்ற தமிழ்ச் சொல்லுக்கு இளமை, மணம், அழகு, கடவுட்டன்மை என்று பொருளுரைப்பர் தமிழ் முனிவர் திரு.வி.க. முருகப் பெருமான் இளையோன்' என்பதற்கு