பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்" "நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் தென்னாட்டில் வைணவப் பெ ரு ம க்க ளா ல் பெரிதும் போற்றப் பெறும் சிறந்த பக்திப் பனுவல் என்பதும், அது மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் பன்னிரு வரால் அருளிச் செய்யப்பெற்ற பாசுரங்கள் அடங்கியது என்பதும், பக்திப் பாடல்கள் என்ற நூல்வகையில் இவை போன்ற பெருமையுடைய நூல்கள் இலக்கிய உலகில் மிக மிக சிலவற்றைத்தான் கருதுதல் கூடும் என்பதும் யாவரும் அறிந்த செய்திகளாகும். இந்த நூலில் அடங்கியுள்ள பிரபந்தங்களின் தொகைபற்றியும், பாசுரங்களின் தொகை பற்றியும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. காலவெள்ளத்தாலும் போற்றுவாரின்மையாலும் எப்படியோ மறைந்து போன இப்பாசுரங்களை நாதமுனி கள் என்ற வைணவப் பெரியார் அரும்பாடு பட்டுத் திரட்டி வேத வியாசர் வேதங்களை நான்காக வகுத்துத் தொகுத்தது போல நாதமுனிகளும் இப் பாசுரங்களை நான்கு தொகுதிகளாக்கி ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாசுரங்கள் அடங்கியிருக்குமாறு அடைவு படுத்தினார். பாசுரங்களை அவர் இசைப்பா', "இயற்பா’ எனப்பிரித்து இசைப்பாக்களை மூன்று தொகுதி களாகவும், இயற்பாக்களை ஒரு தொகுதியாகவும் அடை படுத்தி வெளியிட்டார். அங்ங்னம் அடைவு படுத்திய தொகுதிகள் வருமாறு:

  • திருச்சி டாக்டர் மதுரம் அவர்களின் மணிவிழா மலரில் (1965) வெளிவந்தது. ー ?