பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露乳 வாய்மொழியும் வாசகமும் என்ற பாடலை அருளியுள்ளார் . இதில் கவிஞனின் ஆழ்ந்த சிந்தனை நிழலிடுகின்றது. ஞானியர் காண்கின்ற ஆழ்ந்த நோக்கத்தைச் சில சமயம் கவிஞர்களும் காண்கின் தனர் என்பதற்கு இஃது ஒர் சிறந்த எடுத்துக் காட்டாகும். முதலில் பாடலின் பொருளை நோக்குவோம். கதிரவனைக் காதலனாகவும், பூமியைக் காதலியாகவும் காண்கின்றான் கவிஞன். இந்த இரண்டு பொருள்களும் காதலன்-காதலி தரிசனம் தந்து நிற்கின்றன. கவிஞனுக்கு. ஆம், உண்மையும் அதுதானே. இந்த இரண்டும் இணங்கி இயைந்து இயங்கு வதனால்தான், இவ்வுலகிலுள்ள நிலைத்தினையும் இயங்கு திணையும் தோன்றிநிலை பெற்றுள்ளன :செம்பொன்னை. உருக்கி வார்த்தாலெனக் காட்சியளிக்கும் அந்திவான் செக் கரழகும், கொண்டல் கொண்டலாக ஒடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் அழகும், அத்தண்புனல் மணற்கற். களை அரித்தோடும் அருவியின் அழகும் பச்சைப் பசேலெ னப் பெருங்காட்சியளிக்கும் பொருள்களின் அழகும் அவற்றில் பச்சைப் பாம்பெனப் பின்னிக் கிடக்கும் பசுங் கொடிகளின் அழகும், நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. கதிரவன்-பூமி இரண்டும் கலந்து வாழும் வாழ்க்கையில் நாம் காணும் காட்சிகள் இவை. இவற்றின் அறிவியல் உண்மைகளை விளக்குவோம். கடராச தத்துவம் : கதிரவனே ஆற்றல் மூலம் (The Sun is the ultimate source of energy) staārug இன்றைய அறிவியல் உண்மை. ஆற்றல் முழுவதும் அணுவின் உட்கருவில் தேங்கிக் கிடக்கின்றது என்பது இன்றைய அணுவியல் மெய்ப்பித்த உண்மை. இந்த அகிலத்தைச் சிவமாகக் கொண்டால் கதிரவன் சக்தியா கின்றான். அங்கனமே அணுவின் உட்கருவும் சக்தியாகின் றது. ஒருவருடைய உயிர்ப்பு ஆற்றல் தடைபடாத அவரு டைய இதயத்துடிப்பில் இருப்பதைப் போலவே, இந்த அகிலத்தின் ஆற்றல் கதிரவனிலும் அணுவின் ஆற்றல் அதன் உட்கருவிலும் அடங்கியுள்ளன. அண்டங்களின் தத்துவமும்