பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

爱莎 வாய்மொழியும் வாசகழும் திருத்தொழில்கள் ஐந்தும் ஆருயிர்களின் நன்மையின் பொருட்டேயாகும், இவையனைத்தும் சிவ சக்தியின் வாயி லாகவே அவன் செய்தருள்கின்றான், அம்மையும் அப்பனும் துண்ணறிவு அம்பலமாம் திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கியருள்கின்றனர். அதனால் எல்லாம் சிதம்பரமா கின்றது. அப்பன் செய்தருளும் திருக்கூத்தும் எங்கும் நிறைந்து கானப் பெறுகின்றது. அம்மையின் ஆற்றல் ஒவ் வொரு செயலிலும் தென்படுகின்றது. எல்லா உயிர்களும் உலகங்களும் எல்லா உலகியற் பொருள்களும் அவனைச் சார்ந்து திற்கின்றன, எல்லாச் செயல்களும் அவனைச் சார்ந்துள்ளன, சுருங்கக் கூறின் உலக மெல்லாம் சிவ சக்தி யின் திருக்கூத்தாகும். இதனால் திருமூலரும் அம்பல மாவது அகில சராசரம்' என்றனர். இதனையே சிவஞான சித்தியாரும், உலகமே உருவ மாக யோனிகள் உறுப்ப தாக இலகுபேர் இச்சா ஞானக் கிரியையுட் கரண மாக அலகிலா உயிர்ப்பு லன்கட்கு அறிவினை ஆக்கி ஐந்து கலமிகு தொழில்களோடும் - நாடகம் நடிக்கும் நாதன். ' என்று விளக்கியுரைக்கின்றது. ஆருயிர்கள் எல்லாமும் பேரின்பம் எய்தும் பொருட்டே இறைவன் இந்த ஐந் தொழில்களையும் புரிந்தருள்கின்றனன். ஊழியின் முடிவில் இந்த அகிலம் முழுவதும் அணுத்தத் துவமாக (involution) மாறும் என்பதையும், மீண்டும் படைப்புக் காலத்தில் (Evolution) அஃது அண்டங்களாக S AMMSHHMAAASAAAA 25. சிவஞான சித்தியார்-4 பக்கம் : 257