பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 & வாய்மொழியும் வாசகமும் கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சித்பர வியோக மாகும் திருச்சிற்றம் பலத்துள் கின்று பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி ’ என்று கண்டு வழிபடுகின்றார். கதிரவனே ஆற்றலின் மூலம் என்று மேலே குறிப்பிட் டோமல்லவா?ஏராளமான ஒளியாற்றல் அல்லது கதிர்வீச்சு ஆற்றல் கதிரவனிடமிருந்து உற்பத்தியாகி விசும்பு வெளி யைக் கடந்து நொடி யொன்றுக்கு 1, 86, 000 மைல் வீதம் விரைந்து வந்து நம் பூமியை அடைகின்றது. இது நம்மை வந்தடைய எட்டு மணித்துளிகள் ஆகின்றன. கதிரவனின் உட்புறத்திலுள்ள வெப்பம் 2கோடி சுழியுள்ளது. அங்குளள அமுக்கமும் ஒர் அங்குலத்திற்கு 150 கோடி இராத்தல்களாக உள்ளது. இவ்வளவு வெப்பமும் அமுக்கமும் கதிரவனிடம் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதால்தான் கதிரவனிடமுள்ள கோள் நிலை எலக்ட்ரான்கள் (Planetory electrois) முற்றி லும் உதிர்க்கப் பெறுகின்றன. கதிரவனிடமிருந்து இரண்டு புரோட்டான்களும் இரண்டு நியூட்ரான்களும் இணைந்து பரிதிய உட்கருவை (Helium nucleus) இயற்றுகின்றன. இதனால் அதிகமான அளவு வெப்பம் விடுவிக்கப் பெறுகின் றது. ஒவ்வொரு நொடியிலும் கோடானுகோடி உட்கருக் களில் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. கதிரவனின் தேய்வு : ஒவ்வொரு நொடியிலும் கதிரவ னிடமிருந்து ஒன்றரை கோடியே கோடி குதிரைத்திறன் 29. பெரியபுரா. தில்லை வாழந்-12