பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韓 ஆாய்மொழியும் :ேtசகமும் மாணவர்கள், இந்த அறிவு தர்மபூத ஞானம்' என வழங்கப்பெறும் ஆண்டவனின் தர்மபூத ஞானம் பரந்து நோக்கும் ஆற்றலுடையது; கர்ம வசத்தால் கட்டுப்பட்டிருப்பதால் ஆன்மாவின் தர்மபூத ஞானம் சுருங்கிய நிலையில் இருக்கும். இந்தத் தர்மபூத ஞானத்தால் ஆன்மா தன்னையும் அறிகின்றது; இறைவனையும் அறிகின் றது எந்தப் பொருளும் காணப்பெறுவதற்கு விளக்கின் ஒளி வேண்டு மல்லவா? ஆனால், விளக்கு மற்றொரு விளக்கு வேண்டாமலேயே தனக்குத்தானே நன்கு விளங்கச் செய்வது போலவே. ஆன்மாவும் ஞானத்தை எதிர் பாராம லேயே தனக்குத்தானே விளங்கும். விளக்கும் அதன் ஒளியும் ஒளியுள்ளவைகளாக இருப்பதும் ஒளிக்கு விளக்கு இருப்பிட மாக இருப்பதுபோல் ஆன்மாவும் தான் ஞானமாக இருப்பி பினும் தனக்குத் தர்மமான ஞானத்திற்கும் தான் ஆதார மாகவுள்ளது. " - ஆண்டவன் அருள் இருப்பின் தியானத்தினால் மனம் ஒன்றித் தர்மபூத ஞானம் மலர்ந்து ஆன்மா ஆண்டவ னையே காணும் ஆற்றலைப் பெறும். ஞானிகள் இந்த ஆற்றலைப் பெற்றிருந்தனர். அவர்கள் கால (Time) எல்லையையும் கடந்து காலதத்துவத்தையும் (தத்துவ சூனியம்) கடந்து-நடந்தவற்றையும் நடக்கப்போகுப வற்றையும் அறிந்து கூறும் ஆற்றல் பெற்றவர்கள். அங்ங் னமே விஞ்ஞானிகள் மனம் ஒன்றி ஆய்வுகளால் இடத்தைக் (Space) கடந்து பல உண்மைகளைக் காணவல்லவர்கள். அதனால்தான் தாம் போகாமலேயே மதிமண்டலம், செவ்வாய் மண்டலம் போள்ற இடங்களின் தன்மைகளை நன்கு அறிந்து பயணங்களை ஏற்படுத்த முடிகின்றது. சில ஆண்டு கட்குமுன்னர் ஆளுள்ள பயணங்கள் மேற்கொள்ளப் பெற்று அம்புலியை அடைய முடிந்தது. தாம் போகாம 44. இதன் விளக்கம் மேலும் வேண்டுமாயின் இவ் வாசிரியரின் முத்தி நெறி" (பாரி நிலையம்), 184, பிரகாசம் சால்ை, சென்னை-600 108-பக் 24 காண்க