பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார் 47 நடத்திக் கொண்டு வந்தார். இவருடைய பகவத் பக்தியை யும் பாகவத பக்தியையும் உலகிற்கு உணர்த்த வேண்டும் என்று திருவுளங் கொண்டான் பரமபத நாதன். ஒருநாள் திருமணம் கொல்லை எனற இடத்தில் ஒர் அரசமரத்தில் கலியனும் அவனது அமைச்சர்களும் மாறு வேடத்தில் பதுங்கியிருந்த பொழுது பரமபதநாதன் வேதியனாக மண வாளக் கோலத்துடன் புதுமணம் புணர்ந்த தம் மனைவி யுடன் எல்லாவிதப் பொன் அணிகளைப் புனைந்து கொண் டும் அதிகச் செல்வத்துடனும் சென்று கொண்டிருந்தார். இதனைக் கண்ட கலியன் வாளும் கையுமாகப் பரிவாரங்க ளுடன் இவரை வளைத்துக் கொண்டார். தம்பதிகளின் அணிகலன்களையெல்லாம் கழற்றச் செய்து அவற்றை ஒரு மூட்டையாகக் கட்டினார். திருமணமானவராதலால் கால் விரலில் பொன்னாலான அறுகாழி மோதிரம் (மெட்டி என்றும் சொல்லுவர்) காணப்பட்டது. அதையும் கழற்றித் தருமாறு கேட்டார் கலியன். கழற்ற முடியவில்லை. உடனே மண மகனின் காலைப் பிடித்துக் கொண்டுத் தம் பல்லால் கடித்து வாங்கினார். இப்போது சரணாகதி ஆகி விட்டது. கலியன் கட்டி வைத்த மூட்டையைத் தூக்க முயலும்போது தூக்க முடியவில்லை; பேர்க்கவும் முடிய வில்லை. உடளே மறையவரை நோக்கி, ஐயரே, நீர் ஏதோ மந்திரம் செய்து விட்டீர்' என்று சொல்லி நெருக்க, "கள்வா, அந்த மந்திரத்தை உனக்குச் சொல்லுகின்றேன்" என்று கழுத்தை அணைத்தார். கலியனும் சம்மதித்து நீர் சொல்லாவிடில் இந்த வாளுக்கு இரையாவீர்' என்று தம் கையிலுள்ள வாளைக் காட்டி அதட்டினார். உடனே மறையவரும் மூன்று பதமாய், எட்டெழுத்துகளாய் இலங்கும் ஓம் நமோ நாராயணாய' என்னும் சகல வேத சாரமான திருமந்திரத்தைக் கலியனின் வலத்திருக்காதில் செவிக்கின்பமாய், முன்பு நர-நாராயணராய்த் தமக்குத் தாமே சொல்லிக் கொண்ட துறை திர உபதேசித்தார். அன்றியும், தாமும் வேதியராக வந்த திரு உருவை மறைத் துக் கொண்டார், ஆகாயத்தில் பெரிய திருவடிமீது கார்