பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருமங்கையாழ்வt 醬鬱 ஆழ்வாரின் இறையநுபவம் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களை ஊன்றிப் படிப்போர் அவர் எம்பெருமானை இரண்டு வழிகளில் அநுபவிப்பதை நன்கு அறியலாம்: தாமான தன்மையிலிருந்து கொண்டு எம்பெருமானை அது பவித்தல் ஒருவகை. பிராட்டியின் தன்மையை ஏறிட்டுக் கொண்டு வேற்று வாயாலே பெண்பேச்சாகப் பேசி அநுப வித்தல் மற்றொரு வகை. - திவ்விய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெரு மான்கள் யாவரும் அர்ச்சாவதார மூர்த்திகளே ஆவர். விபவாவ மூர்த்திகளும் அர்ச்சைவடிவில்தான் எழுந்தருளி யுள்ளனர். செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சாவ தாரமேயாதலால் எல்லா ஆழ்வார்களுமே அர்ச்சாவதாரங் களில் ஆழங்கால் பட்டு அநுபவிக்கின்றனர். திருமங்கை யாழ்வார் அர்ச்சாவதாரத்தை அநுபவிப்பதில் பல நிலை களைக் காண்கின்றோம். தாம் பெற்ற அர்ச்சாவதார அநுபவத்தை இவ்வைய கமும் பெற வேண்டுமென்று எண்ணிய பரந்த நோக்குடைய இந்த ஆழ்வார் பிறரையும் அந்தத்திருத் தலங்கட்கு ஏகு மாறு ஆற்றுப் படுத்துகின்றார். - தில்லை, திருச்சித்திரகூடம் சென்று சேர்மின்களே (3-2) திருநறையூர் - மணிமாடம் சேர்மின்களே (6-6) காழிச், சீராம விண்ணகரே - சேர்மின் நீரே (3-4) என்று திருத்தலங்கட்கு ஆற்றுப் படுத்துவதைக் காணலாம். இதனை ஒரு முறைக்கு ஒன்பது முறையாகச் சொல்லிச் சொல்லி வற்புறுத்துவதையும் காணலாம்.