பக்கம்:வாய்மொழி இலக்கியம்.pdf/5

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 முன்னுரை

  ஒரு நாட்டின் உண்மையான வாழ்க்கை நெறியை 

அறிந்து கொள்ள வேண்டுமாயின், அந்நாட்டு மக்கள் வாழும் ஒதுக்கிடங்களை நாடிச் செல்ல வேண்டும் என்ற உண்மையைத் தற்போது உலக அறிஞர் உணர்ந்து வருகின்றனர். மொழித்துறை ஆராய்ச்சி செய்யும் பெரும் பேரறிஞர்கள் அனைவரும் அம் மொழித்துறை ஆராய்ச்சியினே மூலை முடுக்குகளில்-காட்டரண் முதலிய அமைத்து வாழும் கல்லா மக்களிடம்-தொடங்க வேண்டுமென முடிவு செய்து, அத்துறையிலேயே தற்போது பணியாற்றி வருகின்றனர். காடோ, செடியோ, கடற்புறமோ என்று செல்லாத இடங்களுக்கெல்லாம் சென்று அங்கங்கே கல்லா மாக்கள் பேசும் கொச்சை மொழிகளை (dialects) ஆராய்ந்து வருகின்றனர். உண்மையில் பல நாட்டவரோடு கலந்து பழகி, பலவற்றைப் பரிமாறிக் கொண்டு வாழும் நகர மக்களைக் காட்டிலும், ஒதுக்கிடங்களில் வாழும் கல்லா மாக்களே அவ்ந்நாட்டுப் பழம் பெருமையையும் மொழியியல்பையும் வாழ்வின் அடிப்படையினையும் மங் காது வாழ வைக்கின்றனர் என்பதை உணர்ந் து வருகின்றது அறிஞடர் உலகம்.


   பேச்சு மொழி மட்டுமன்றி அக்கல்லா மாக்கள் பாடும்
வாய்மொழி இலக்கியமாகிய நாடோடிப் பாடல்களும்
அந்த வகையிலே வைத்து எண்ணத் தக்கனவேயாம்.