பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<92 வாருங்கள் பார்க்கலாம் அவர் அந்த வரலாற்றைச் சொன்னர். பாணுசுர :னுடைய தாய் மாதலி என்பவள் தினந்தோறும் நூற்றெட்டு லிங்கங்களே வைத்துப் பூசித்தாளாம். நூற்றேழு சிவலிங்கங்களை மண்ணுற் செய்து அமைத்துத் தன்தாய்க்குக் கொடுப்பான் பாணுசுரன். பிறகு எங்கேனும் கோயிலில் உள்ள சிவலிங்கம் ஒன்றை எடுத்து வந்து நூற்றெட்டாவது லிங்கமாக வைப்பான். ஒவ்வொரு நாளும் இது நடந்து வந்தது. ஒரு நாள் நூற்றெட்டாவது சிவலிங்கமாக இந்தத் தலத்தில் உள்ள அக்கினரீசுவரரை வந்து எடுத்தான். எடுக்க முடியவில்லை. அசைத்தான். அவர் சற்றே கோணலாகச் சாய்ந்தாரே ஒழியப் பேtந்து வர வில்லை. உடனே பாணுசுரன் தன் தாயை இங்கே அழைத்து வந்து பூசை புரியச் செய்தான். அவள் தன் வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருந்து வழி பட்டுக் கடைசியில் இத்தலத்திலே உயிர் நீத்தாள், “பாணுசுரன் அசைத்து எடுத்தபோது ஒருபக்கம் சாய்ந்தமையால் இங்குள்ள மூர்த்திக்குக் கோணப் பிரான் என்று ஒரு திருநாமம் வழங்குகிறது” என்று குருக்கள் வரலாற்றைக் கூறி முடித்தார். அவர் பாணு சுரனப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் என் மனம் சரித்திர உலகத்துக்குத் தாவிக் கொண்டிருந்தது. வாணர் அல்லது பாணர் என்ற குலத்து அரசர் பலர் அங்கங்கே சிவபிரானுக்கு ஆலயம் அமைத்தும் நிவந்தங்கள் அமைத்தும் இருக்கிருர்கள். அவர் களுக்குள் யாரோ ஒரு பாண அரசன் இதை வெட்டி யிருக்கலாம் என்று எண்ணினேன். பாண அரசனே. பாண அசுரனே, யார் வெட்டினுலும் சரி, இந்த அகழி பழமையானது என்பதில் ஐயமில்லை.