பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானக் குழந்தை பிறந்த ஊர்

  • அதோ பார் அந்தக் காட்சியை என்று காட்டினர், விமான ஒட்டி. :- -

நான் பார்த்தேன்; கண் குளிரப் பார்த்தேன். எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற சோலே கள்; வளப்பம் மலிந்து விளங்கின. "என்ன அழகு என்ன வளம்" என்று வியப்பில் மூழ்கி நின்றேன். "இன்னும் சற்றுக் கூர்ந்து பார்" என்ருர் விமானத் தலைவர். அதை ஒட்டுபவரும் அதற்குத் தலைவரும் அவரே. . - நான் கூர்ந்து பார்த்தேன், அழகான நெல் வயல் அதன் ஒரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் தன் இதழ்களே அகல விரித்துச் செந்தாமரை மலர்ந்து விளங்குகிறது. வயலின் கரையில் நன்ருக வளர்ந்து நிற்கிறது ஒரு மாமரம். மாம்பழங்கள் பழுத்துக் குலுங்குகின்றன. கனிந்த கனிகள் சுவை முதிர்ந்து வெடித்து அவற்றின் சாறு தேன்போல ஒழுகுகிறது. மாவிலேயின் வழியே வழியும் அந்தத் தேன், வயல் ஒரத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலரில் ஒழுகி விழுகிறது. இதைப் பார்த்தேன். தேமாவின் கனி கிழிந்த மது, பங்கய மலரில் வீழ்கிறதைக் கண்டாயா ?' என்ருர் விமானத்