பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகலூர் மேவிய புண்ணியன் 97 கோணப்பிரானுகிய புகலூர் இறைவனுக்கு அக்கினிசுவரர் என்பது திருநாமம். அக்கினி பகவான் இங்கே வந்து பூசித்ததாக ஓர். ஐதிஹ்யம். அக்கி விக்குத் தனியே மூல மூர்த்தியும், உற்சவ மூர்த்தியும் இங்கே இருக்கின்றன. மதிலில் இருந்த சிற்பத்தில் சிவலிங்கப் பொருமான அக்கினி பூசிக்கும் நிலை யில் ஓர் உருவ ம் இருக்கிறது. ஆதிசேட்ன் பூசித்ததற்கு அடையாளம் இருக்கிறது. காமதேனு பூசித்ததாம். அந்த அடையாளமும் இருந்தது. இவை மேல்வரிசையில் அமைந்த சிற்பங்கள். கீழ் வரிசையிலும் சில சிற்ப உருவங்கள் இருந்தன. அவற்றின்மேல்கண்ணே ஒட்டினேன். - அப்பன் சுவாமிகளின் இறுதிக் காலத்தைப் - பற்றி ஒரு பைத்தியக்காரக் கதை வழங்குகிறது. அந்தக் கதையைச் சொல்வதற்கு முன்னுல் அது எப்படி உண்டாகியிருக்க வேண்டும் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். திருப்புகலூருக்கு ஒருவர் வந்தார். அப்போது வேறு அன்பர் ஒருவர் அப்பர் சுவாமிகளின் திருத் தாண்டகத்தைப் பாடிக்கொண்டிருந்தார். புண் ணியா உன் அடிக்கே போதுகின்றேன். பூம்புகலூர் மேவிய புண்ணியனே' என்று முதற் பாட்டைப் பாடிவிட்டு இரண்டாவது பாட்டைப் பாடிஞர். நஞ்சுண்டு சாவா மூவாச், சிங்கமே தே ைதேவே" என்று அந்தப் பாட்டைப் பாடி முடித் தார். அருகில் நின்று கேட்டவருக்கு இந்தப் பதிகம் அப்பர் சுவாமிகள் பாடிய இறுதிப் பதிகம் என்பது