பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 வாருங்கள் பார்க்கலாம் காலத்தைப் பற்றி இலக்கணக்காரர்களும் தத்துவ அறிஞர்களும் வான சாஸ்திரிகளும் பி ற ரும் ஆராய்ச்சி செய்திருக்கிருர்கள். நிகழ் காலம் என்பது ஒன்று இல்லை. அதற்குப் பரிமாணமே இல்லை. ஒன்றை இதுதான் நிகழ்காலம் என்று கூறினல், அப்படிச் சொல்வதற்குள் அது இறந்த காலம் ஆகிவிடுகிறது. எதிர்காலம் இறந்த காலம் ஆகும் நிலையில் இடையே நிகழ் காலம் போன்ற தோற்றம் உண்டாகிறது. அப்படி ஒன்று இல்லவே இல்லை' என்பது சிலர் கொள்கை. நாம் கண்கூடாக வாழ் வது நிகழ்காலத்தில்தான். இறந்த காலமும் எதிர் காலமும் நினைவளவில் இருப்பனவே ஒழிய உண்மை யாக அநுபவத்தில் தோற்றுவது நிகழ்காலந்தான்' என்பது வேறு சிலர் கொள்கை. - - ஜியாமெட்றி என்ற கூேடித்திர கணிதத்தில் புள்ளி என்பது இன்னதுதான் என்று சுட்ட இயலாத தாகையால், பெருக்கல் குறி போன்ற இரு கோடுகள் இட்டு அவை சந்திக்கும் இடத்தையே புள்ளியாகக் கொள்வர். அந்தப் புள்ளிக்கு அளவு இல்லை. ஆணுலும் புள்ளி என்பது ஒன்று உண்டு. அது. போலவே இறந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் காலம் நிகழ் காலம். அது இன்ன அளவுடையது என்று சுட்டிக் காட்ட இயலாதபடி நுட்பமுடைய தானலும் அப்படி ஒன்று இருப்பது உண்மை. இந்த மூன்று காலமுமாக இறைவன் விளங்கு கிருன் என்பதை அப்பர் சுவாமிகள், நெருநலேயாய்: இன்ருகி நாளேயாகி' என்று இந்தத் தலத்தில் பாடு வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இங்கே மூன்று