பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தோன்றிய ஊர் 113 நரசிங்க முனையரையர் சிவபக்தியிற் சிறந்தவர். சிவனடியார்களிடத்தில் ஆராத அன்பு உடையவர். சிவச் சின்னங்கள் பூண்டவர் யாரானுலும் அவர் குணங்களைக் கருதாமல் பணிந்து உபசாரம் செய்கிற வர். ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரத்திலும் சிவபெருமானுக்குச் சிறப்பாகப் பூசை செய்வித்துச் சிவனடியார்களுக்குப் பொருளும் உணவும் வழங்கு வார். ஒவ்வொருவருக்கும் நூறு பொன்னுக்குக் குறை யாமல் கொடுப்பார். ஆறுஅணிந்த சடைமுடியார்க்கு ஆதிரைகள் தொறும்என்றும் வேறு கிறை வழிபாடு விளங்கியது சனமேவி கிறு அணியும் தொண்டர்அணங் தார்க்கெல்லாம் கிகழ்பசும்பொன் நூறுகுறை யாமல்அளித்து - இன்னழுது நுகர்விப்பார் என்று அவருடைய பெருமையைச் சேக்கிழார் கூறுகிருர், - - திருநாவலூரில் ஆதிசைவர்களும் மற்ற வேதியர் களும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் சடையனுள் இறைவனிடம் மிக்க பக்தி உடையவர். அவருடைய தேவியார் இசை ஞானியார். அவர் இசையில் சிறந்த வராக இருந்திருத்தலும் கூடும். அன்று நரசிங்க முனையரையர் திருக்கோயிலுக் குள் புகுந்து தரிசனம் செய்து கொண்டிருந்தபோது சடையனர் பூசை முதலியன புரிந்தார். அவருடன் ஓர் இளம் பிள்ளேயும் உடன் இருந்தான், வா. -மா. - ே