பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தோன்றிய ஊர் ! #5 "நீ குதிரையேறப் பழகிக் கொள்கிருயா?’ என்று கேட்பார். : "ஓ! சொல்லிக் கொடுத்தால் நன்ருகப் பழகு வேன்' என்று சிறுவன் கூறுவான். - அவனுக்கு நல்ல குரல் இருந்தது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் பதிகங்களே இசையுடன் பாடினன். "உனக்கு யார் இவற்றைச் சொல்லித் தந்தார் கள்?’ என்று அரசர் கேட்டார். "என்னுடைய அம்மா' என்று விடை வந்தது. தன் வயசுக்கு மிஞ்சிய அறிவும் சுறுசுறுப்பும் அந்தச் சிறுவனிடம் இருப்பதைக் காணக் கான நரசிங்க முனேயரையருக்கு அவனேத் தம் அரண்மனை யில் கொண்டு போய் வளர்க்க வேண்டும் என்ற ஆசை முறுகி வளர்ந்தது. அரசர் தரிசனத்துக்கு வந்துவிட்டார் என்ருல், ஆரூரன் குடுகுடுவென்று அவரிடம் ஒடுவான் ; 'அப்பா, மன்னர் வந்து விட்டார் ' என்று முழங்கிய படியே ஒடுவான். அரசர் இறைவனுடைய பூசைக் குரிய பண்டங்களேக் கொண்டுவர மறந்தாலும் மறப்பார்; ஆரூரனுக்குரிய பண்டத்தைக் கொண்டு வர மறக்கவே ம ட் டார். சில நாள் பழம் கொணர்ந்து தருவார்; சில நாள் ஆடை கொண்டு வந்து வழங்குவார்; சில நாள் ஏதாவது அணிகலன் கொணர்வார். அரசருக்குத் தம் மகன் மேலுள்ள அன்பைச் சடையனுர் நன்கு உணர்ந்தார். நாவலூ ரில் வாழ்ந்த மக்கள் யாவரும் தெரிந்து கொண்டார் கள். "ஆருரன் மன்னர் குலத்தில் பிறக்க வேண்டிய: