பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தோன்றிய ஊர் #23. மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர்நாவலர் கோன்கம்பி யூரன், கண்புடைய கன்சடையன் இசைஞானி சிறுவன் காவலர்கோன் ஆரூரன். இப்படிப் பல இடங்களில் திருநாவலூர்க்காரர் களை நாவலர் என்றும் தம்மை அவர்களுக்குத்தலைவர் என்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகளே சொல்கிருர். C “இது என்ன சந்நிதி? “பெருமாள் சந்நிதி.” “பழைய சந்நிதியா?” "ஆமாம், இங்கே வரதராஜப் பெருமாள் எழுந்: தருளியிருக்கிருர், வாருங்கள், தரிசனம் செய்யலாம்” என்று அழைத்துச் சென்ருர்கள். அம்பிகையின் சந்நிதிக்கும் இறைவன் கோயிலுக்கும் இடையே அவர் கோயில் இருக்கிறது, சற்று உயரமான இடத் தில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளியிருக்கிருர், சிவாலயத்தில் திருமால் கோயிலும் சேர்ந்திருக் கும் இடம் தமிழ் நாட்டில் பல ஊர்களில் உண்டு. கோயில் என்று சிறப்பித்துச் சொல்லும் சிதம்பரத்தில் நடராஜரும் கோவிந்தராஜரும் அருகருகே சேவை சாதிக்கிருர்கள். சைவரென்றும் வைணவரென்றும் வேறு வேருக இருந்தாலும் சமுதாய வாழ்வில் இரு சாராருக்கும் பொதுவாக எத்தனையோ காரியங்கள் உண்டு, அவர்கள் ஒரே எல்லேக்குள் வழிபடுவதற்கு ஏற்றபடி திருக்கோயில்களும் வகுத்திருக்கிருர்கள்.