பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வாருங்கள் பார்க்கலாம் லேயே பேரழகராகிய ஆருரர் திருமணக் கோலம் புனேந்து வரும்போது, “புராணத்தில் மன்மதன் மன் மதன் என்று சொல்கிருர்களே , அந்தப் பேர்வழி இவரை விடவா அழகாக இருப்பான் ? எப்படி இருக்க முடியும் ?' என்று கண்டவர்கள் பேசிக் கொண்டார்கள். ஆரூரர் நடந்தா வருவார் ? ஜம் மென்று அழகிய குதிரையொன்றில் ஏறிக்கொண்டு வருகிருர், அரசருக்குரிய மதிப்புடையவர் அல்லவா? இறைவனுடைய திருவடியை நினைத்தபடி அந்த யோகப் புரவியிலே வருகிருர். மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க நன்னகர் விழவு கொள்ள நம்பியா ரூரர் கனதள் தன் அடி மனத்துட் கொண்டு தகுந்திரு நீறு சாத்திப் பொன்அணி மணியார் யோகப் புரவிமேற் கொண்டு போக்தார். உடன் வருபவர்கள் பல்லக்கு முதலிய வாகனங்களில் வந்தார்கள். பெரிய கூட்டந்தான். திருநாவலூரி லிருந்து புத்துரை நோக்கி அந்தக் கல்யாணக் கூட் டம் வந்து கொண்டிருந்தது. புத்துார் எல்லையை மிதித்துவிட்டார் நம்பியா ரூரர். புரவியிலிருந்து இறங்கினர். நிறை குடம், வாசனைப்பண்டங்கள், விளக்குகள், மலர், சுண்ணம், அறுகு, பொரி முதலிய மங்கலப் பொருள்களை ஏந்தி அவரைப் பெண் வீட்டுக்காரர்கள் வரவேற்ருர்கள், சந்தனத்தையும் பூவையும் வாரி இறைத்தார்கள்