பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - வாருங்கள் பார்க்கலாம் மெய்த்ததெறி வைதிகம் வினைக்தழுத லேயோ இத்தகைய வேடம்னை ஐயமுற எய்தி. இந்த முதுமையழகு பழுத்த அந்தணர் பெருமான் இளமையழகு கொழுந்துவிடும் நம்பியாரூரருக்கு முன்னே சென்ருர். ஆரூரர் கல்யாணக் கோலத்தில் நடந்தார். இந்தக் கிழவர் ஏதோ உரிமைபற்றித் தளர்ச்சியிலும் மிடுக்குத் தோன்ற எதிரே சென்ருர், கநில்லுங்கள். நான் ஒன்று சொல்ல வேண்டும். எல்லோரும் கேளுங்கள்.” கணிரென்று கூறிக் கிழவர் தம் கையை ஓங்கிக் காட்டிக் கூட்டத்தை நிறுத்தினர். அவருடைய தோற்றமே கூட்டத்தினரை நிறுத்திவிட்டது. கூட் டத்தில் இருந்தவர்களும் கல்யாணப் பிள்ளையும் அவரைப் பார்த்தார்கள். இந்தச் சமயத்தில் இந்த ஒற்றைப் பிராம்மணர் குறுக்கே வந்து நிற்கிருரே! என்று பெண் வீட்டுக்காரர்களுக்கு உள்ளுக்குள் கோபம் உண்டாயிற்று. மற்றவர்களோ ஒன்றும் புரியா மல் அவரைப் பார்த்தபடியே நின்ருர்கள். நம்பியாரூரருக்குக் கோபம் உண்டாகவில்லை. அந்தணர் பெருமானுடைய கோலம் அவர் உள்ளத் தைக் கவர்ந்தது. அந்தக் கிழவருடைய திருமுகத் தேசு ஆரூரருடைய அன்புணர்ச்சியை மலரச் செய் தது. இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்று அவரை அந்தக் கிழவரோடு பிணைத்தது. எத்த னயோ பிறவிகளில் பிரியாதிருந்தவர் சிறிது பிரிந்து