பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 வாருங்கள் பார்க்கலாம் கள்' என்று சொல்லி வெற்றிக் களிப்போடு புறப்பட் டார். அவரைத் தொடர்ந்து நம்பியும் மறையவர் களும் சென்ருர்கள். கிழவர் திருக்கோயிற் பக்கம் சென்ருர். கோயிலுக்குள்ளே புகுந்தார். அப்புறம் அவரைக் காண வில்லை. வந்தவர்கள் யாவரும் திகைத்து நின்று விட்டார்கள், நம்பியாரூரர். எம் .பிரான் கோயிலுக்குள் இவர் புகுந்தாரே; ஏன்? என்று எண்ணிப் பேரார்வத்தோடு கோயிலுக்குள் தனியே சென்று, சுவாமி!” என்று அழைத்தார். அடுத்த கணம் அவர் முன் வானவெளியில் சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் எழுந்தருளிக் காட்சி கொடுத்தான். “ஆரூரா, நீ ஆலால சுந்தரன் என்ற தொண் டன். திருக்கைலாயத்தில் நமக்குத் தொண்டு புரிந்து கொண்டிருந்தவன். உலகில் பிறக்க வேண்டுமென்று நாம் கட்டளையிட்டபோது உன் வேண்டுகோளுக்கு இணங்கி, உன்னத் தடுத்து ஆட்கொள்வதாகச் சொன்னுேம். அதன்படியே மறையவர்களுக்கு முன் தடுத்து ஆட்கொண்டோம்' என்று இறைவன் திரு வாய் மலர்ந்தருளினுன். சுந்தரர் இன்பப் புயலிடையே சிக்கித் தடுமாறி ஞர் அவர் உடம்பு புளகம் போர்த்தது. கண் அருவி சோர்ந்தது. கதறினர். ‘எம்பெருமானே! தேவரீர் வலிய ஆட்கொண்ட செயலோ இது ?" என்று பக்தி பரவசமாக நின்று துதித்தார். 'அப்பா, நீ வல்வழக்குப் பேசினமையால் வன் ருெண்டன் என்ற பெயர் உனக்கு ஆகுக'. நமக்கு அர்ச்சனே செய்யும் குலத்தில் உதித்தாய். நமக்குச்