பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140. வாருங்கள் பார்க்கலாம் (பித்தா, பிறையைச் சூடினவனே, அருள் நிரம் பியவனே, எதலுைம் மறவாமல் நினைக்கின்றவளுகிய என் உள்ளத்தில் உன்னே வைத்தவனே, பெண்ணே யாற்றின் தென் கரையில் உள்ள திருவெண்ணெய். நல்லூர் என்னும் தலத்தில் அருட்டுறையென்னும் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அப்பனே, உனக்கு. ஆளாகிவிட்டு, இப்போது நான் அடிமையல்லேன் என்று சொல்ல முடியமா ?) இறைவனுடைய சந்நிதியில் நின்ற சுந்தரமூர்த்தி: நாயனுர் தாயை இழந்த கன்று மீட்டும் தாயை அடைந்தால் எந்த நிலயில் இருக்குமே அத்தகைய உணர்ச்சி நிலையில் இருந்தார். இறைவன் ஆருயிர்களுக்கெல்லாம் தாய் போன் றவன். குழந்தைகள் தாயை மறந்து விடுகின்றன. ஆனல் தாயோ குழந்தைகளே மறப்பதில்லை. தமக்குத் தாய் ஒருத்தி இருக்கிருள் என் தைக்கூடக் குழந்தைகள் உணராமல் இருக்கிரு.ர்கள். தாய் குழந்தையை என்றும் மறப்பதே இல்லை. அந்தக் குழந்தையுடன் என்றைக்குக் கூடப் பாகின் ருேம் என்று பித்துப் பிடித்து அலேகிருள். அவளுக்கு இருக்கிற உணர்ச்சியைக் குழந்தை உணர்வதில்லை. அவளைச் சென்று சாரவேண்டும் என்ற நிகனவே அதற்கு இருப்பதில்லை. “பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்று ஒரு பழமொழி உண்டு. எத்தனைதான் தாய் அருகிலே வந்தாலும் அவர் ளுடைய அருமைப்பாட்டை அறியாத பிள்ளே அவளைப் புறக்கணித்து உதறிவிடுகிருன். ஆயினும் அவள் மீட்டும் மீட்டும் அவனே எந்த வழியிலாவது: