பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வாருங்கள் பார்க்கலாம் பொல்லாப் பிள்ளையாருடைய பேரருளாற்றல் விளக்க இக்காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இவ்வூருக்கு அருகில் சிறு மதுரை என்ற ஊரில் இப் போது சற்றேறக் குறைய 65 வயசுடைய மாசிலா மணி உடையார் என்பவர் இருக்கிருர். அவர் எட்டு வயசு வரையில் ஊமையாக இருந்தாராம். திரு வெண்ணெய் நல்லூருக்கு வந்து பொல்லாப் பிள்ளே யாரைத் தினந்தோறும் காலேயில் வழிபட்டு வந்தார். எட்டாவது வயசில், பேசும் ஆற்றல் அவருக்கு உண்டாயிற்று. அவர் இன்னும் காது கேளாதவராக இருப்பினும் பேசுகிருர். பொல்லாப் பிள்ளையாரின் திருவருளால்தான் அவருக்குப் பேசும் ஆற்றல் வந்த தென்பதை அவ்வூரினரும் பிறரும் சொல்லுகிருர்கள். தென் ஆர்க்காடு ஜில்லா போர்டு துணைத் தலைவர் திரு அண்ணுமலே உடையாருடைய சிற்றப்பா அந்தப் பெரியவர். திரு அண்ணுமலே உடையாரே எனக்கு இச்செய்தியைச் சொன்னர். வெளிப் பிராகாரத்தில் சுவாமி கோயிலுக்கு வடக்கே அம்பிகைக்குத் தனிக் கோயில் இருக்கிறது. மங்களாம்பிகை என்றும் வேற்கண்ணியம்மை என்றும் திரு நாமங்கள் வழங்குகின்றன. கோயிலில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. "ராஜ ராஜ வளநாட்டுத் திருமுனைப்பாடி திரு வெண்ணெய் நல்லூர் நாட்டு ப்ரம்மதேயம் திரு வெண்ணெய் நல்லூர் உடையார் ஆட்கொண்ட தேவர்க்கு...... ’ என்று வரும் ஒரு சாசனத்தின் ஆரம்பத்தைப் படித்துப் பார்த்தேன். திருமுனைப் பாடி நாடு என்பது நடுநாட்டின் பெரும் பகுதி.