பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்ணெய் கல்லூர்ப் பித்தன் 147 கோயிலுக்கு வெளியே தெற்கே ஒரு தீர்த்தம் இருக்கிறது. அதற்கு அப்பால் வைகுண்டநாதப் பெருமாள் கோயில் இருக்கிறது. தீர்த்தம் இரண்டு கோயிலுக்கும் பொதுவானது. ஆல்ை ஒவ்வொரு கோயிலாரும் ஒவ்வொரு பெயர் வைத்து வழங்கு கின்றனர் சைவர்கள் வீதிஹோத்ர மஹரிஷிக்காக இறைவன் தண்டத்தை ஊன்றி இந்தத் தீர்த்தத்தை உண்டாக்கினுனென்று கதை சொல்லி, இதற்குத் தண்ட தீர்த்தம் என்ற பெயரை வைத்திருக்கிருர்கள். வைஷ்ணவர்களோ சக்கர தீர்த்தம் என்று சொல் கிருர்கள். எப்படியோ இருவரும் தீர்த்தத்தைப் பயன் படுத்திக் கொள்கிறர்கள். ஊரின் பெயரிலேகூட இரண்டு வழக்கு உண்டு. சைவர்கள் திருவெண்ணெய் நல்லூர் என்று சொல் வதைச் சாசனமும் இலக்கியமும் மற்ற வழக்குகளும் காட்டுகின்றன. வைஷ்ணவர்கள் நாமும் இதற்கு ஒரு பேர் வைப்போமே என்று எண்ணினர்கள். வீட்டில் உள்ள குழந்தைக்கு அப்பா ஒரு பேரும், அம்மா ஒரு பேரும் வைத்து அழைப்பதில்லையா ? அப்படித்தான் இதுவும். வைஷ்ணவர்கள் கொடுத்த பெயர் திருவோண நல்லூர். திருவெண்ணெய் நல்லூர் என்ற பெயரின் ஒலிக்கும் இந்தப் பெயரின் ஒலிக்கும் உள்ள வேறுபாடு மிகக்குறைவு. பெயர் வந்ததற்கு ஒரு கதை வேண்டாமா? வைகுண்ட நாதருடைய அன்பர்கள் ஒரு கதையைச் சொல்கிருர்கள். சாண்டில்ய மஹரிஷி ஒவ்வொரு நட்சத்திரத்திலும் ஒவ்வொரு கூேடித்திரமாகப் போய் யாகம் செய்து வந்தாராம். அவர் திருமாலுக்கு அன்பர். இங்கே ஒரு திருவோண நட்சத்திரத்தில்