பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையார் ஊர் "சக்கரவர்த்தியிடம் இந்தக் காவியத்தை இயற்றி முடித்து விடுகிறேன் என்று உறுதி மொழி கூறிவிட்டு வந்திருக்கிறேன். இனிமேல் நான் குன் றத்துரில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. ஊரு ராகப் போய் அங்கங்கே நாயன்மார்களைப் பற்றிக் கிடைக்கும் செய்திகளைத் தொகுத்துப் பாட ஆரம் பிக்க வேண்டும். இறைவன் திருவருளால் இந்தக் காவியம் நிறைவேற வேண்டும்' என்று சொல்லிச் சேக்கிழார் புறப்பட்டார். சோழ மண்டலத்துப் பேரரசனுக்கு அமைச்சராக இருந்தமையால் அவர் சென்ற இடமெல்லாம் சிறப்புப் பெற்ருர். திருக் கோயில்கள் நல்ல முறையில் விளங்கின. நித்திய நைமித்திகங்கள் குறைவின்றி ஒவ்வொரு கோயி லிலும் நிகழ்ந்து வந்தன. தேவாரத் திருப்பதிகங்களே ஒதாத கோயிலே இல்லை. எங்கே எங்கே சமயா சாரியர்கள் வந்து சென்ருர்களோ, அங்கேயெல்லாம் அன்பர்கள் அவர்கள் வந்துபோன செய்தியைக் கதை கதையாகச் சொன்னர்கள். அவர்களுடைய பாட்டனுக்குப் பாட்டன் கால முதல் வரும் பழங் கதைகள் அவை. நாயன்மார்கள் உதித்த இடங்களுக்குச் சென் ருர் சேக்கிழார். அவர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற ஆலயங்களுக்கெல்லாம் சென்ருர். அங்கங்கே தாம் தொகுத்த செய்திகளை எண்ணி எண்ணி அவர் வியப்பில் ஆழ்ந்தார். நாயன்மார்களின் பெருமையை