பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரவையார் ஊர் 151 யும் நினைத்து உருகினர். இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளும்படியான வாய்ப்பு நமக்குக் கிடைத்ததே என்று ஆனந்தம் அடைந்தார். ஒருவாறு செய்திகளைச் சேகரித்துக்கொண்டு திருத்தில்லே வந்து சேர்ந்தார். நல்ல நாளில் பாடத் தொடங்கினர். 'உலகெலாம்’ என்ற அசரீரி வாக்கு அவருக்கு உதவியாக இருந்தது. திருத்தொண்டர் புராணத்தைத் தொடங்கிவிட்டார். ஆல்ை இப்போது சேக்கிழாருக்கு ஒரு பெரிய சந்தேகம் வந்துவிட்டது. நாயன்மார் வரலாறுகளைக் காவியமாகப் பாடுவது அவர் நோக்கம். காவியம் என்ருல் அதற்கென்று சில அமைப்புகள் உண்டு. நாட்டை வருணிக்க வேண்டும். இந்தக் காவியத் தில் எந்த நாட்டை வருணிப்பது? எந்த ஊரை வரு னிப்பது ? அறுபத்து மூன்று நாயன்மார்களுடைய சரித்தி ரத்தைக் காவியமாகச்செய்யத் தொடங்கியிருக்கிரு.ர். அந்த அறுபத்து மூன்று பேரும் ஒரு நாட்டில் ஓர் ஊரில் வாழ்ந்தவர்கள் அல்லர். அவர்களே நாயகர் களாக வைத்துப் பாடும் பாட்டில் அத்தனே பேரு டைய நாடுகளையும் ஊர்களேயும் வருணிப்பதுதான் பொருத்தம். அப்படியானுல் ஒவ்வொரு நாயனர் கதையும் ஒவ்வொரு குட்டிக் காவியமாக அல்லவா ஆகிவிடும் ? - இந்த யோசனையில் சேக்கிழார் ஆழ்ந்தார். 'இந்த அறுபத்து மூன்று பேரில் யாராவது ஒருவரை முக்கியமாகக் கொண்டு அவருடைய நாட்டையும் ஊரையும் வருணிக்கலாமே! என்ற எண்ணம் அடுத்