பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 வாருங்கள் பார்க்கலாம் தபடி அவருக்கு உண்டாயிற்று. அப்படிச் சொல்வ தாக இருந்தால் யாரைத் தலைமையாக வைப்பது? என்ற கேள்வி அதைத் தொடர்ந்து அவர் உள்ளத் தில் தோன்றியது. பளிச்சென்று சேக்கிழாருக்குத் தெளிவுபிறந்தது. பெரிய புராணத்துக்கு ஆதாரம் சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகை. சுந்தரமூர்த்தி சுவாமி களையே காவிய நாயகராகக் கொண்டு பாடிவிட லாம் எ ன் று தோன்றியது. திருத்தொண்டத் தொகையை முன் பணித்த திருவாளராகிய அவ ருடைய கதையாக வைத்து, இடையிலே உபாக்கி யானங்களாக, கிளேக் கதைகளாக, ஏனைய நாயன் மார் வரலாறுகளேப் பாடலாம் என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையை அருளிய இடம் திரு வாரூர். திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரய மண்டபத்தில் எழுந்தருளியிருந்த தொண்டர்களைக் கண்டு, 'இவர்களுக்கு ஆளாகும் நிலை வருமா? என்று ஏங்கி உருகிப் பிறகு பாடிய பதிகம் அது. ஆதலின் பெரிய புராணத்துக்கு வித்தாகிய திருத் தொண்டத் தொகை பிறந்த நாடு சோழ நாடு; நகரம் திருவாரூர்; அதைப் பிறப்பித்தவர் சுந்தர மூர்த்தி சுவாமிகள். சேக்கிழார் சுவாமிகள் தம்முடைய பெரிய புரா ணத்துக்குரிய கட்டுக்கோப்பைக் காவிய ரீதியில் உள்ளத்திலே உருவாக்கிக் கொண்டார். சோழ நாட்டின் சிறப்பைச் சொல்லி, பிறகு திருவாரூரின் பெருமையைப் பாடி, அந் நகரத்துப் பூங்கோயிலில் உள்ள தேவாசிரயன் என்னும் திருக்காவணத்தைச்