பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 பரவையார் ஊர் என்று பெயர்' என்று ஓர் அன்பர் சொன்னர், இறை வனுடைய திருவடித்தாமரை பதிந்து நடந்த திருவீதி யாதலின் அந்தத் தாமரையின் மணம் அங்கே வீசிய தாம். இன்னும் காவிய உலகத்தில் அந்த வீதியின் மணம் வீசுவதைக் காண்கிருேம். உள்ளே சென்றேன். சந்நிதியில் யானே வாக னம் நிற்கிறது. சுந்தரர் திருக்கைலாயத்துக்குச் செல் லும் போது இறைவன் விடுத்த வெள்ளானேயின் மேல் சென்ருர். சுந்தரரைக் காவியநாயகராகக் கொண்டு புராணம் பாடிய சேக்கிழார், தம் புராணத் தின் கடைசியில் வெள்ளானைச் சருக்கம் என்பதை வைத்திருக்கிருர். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கதை. யின் இறுதிப் பகுதியை அதில் சொல்லிப் பெரிய புரா ணத்தை நிறைவேற்றுகிருர், அந் நாயனர் வெள்ளா ஐனயின்மேல் கைலை சென்ற செய்தியைச் சொல்லி முடிப்பதால் அதற்கு வெள்ளானேச் சருக்கம் என்ற பெயர் வந்தது. சுந்தரர் வெள்ளையானேயின்மேல் இறைவன்பால் சென்ற சிறப்பை எண்ணி அவருக்கு அதனையே வாகனமாக அமைக்கும் வழக்கம் ஏற். பட்டது. - - பரவை நாச்சியாருடைய திருக்கோயிலில் சுந்த ரரும் இருக்கிருர். உண்மையில் அது சுந்தரர் கோயில் தான். ஆயினும் நாச்சியாருடைய திருமாளிகை இருந்த இடமாதலின் அக்கோயில் பரவையாருடைய பெயராலே வழங்குகிறது. உற்சவ மூர்த்திகளையும் தரிசித்துக்கொண்டேன். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் தோழரும் அவருடன் திருக்கைலேக்குச் சென்றவரும் சேர அரசருமாகிய சேரமான் பெருமாள் நாயனரும் உற்சவ மூர்த்தியாக இக்கோயிலில் இருக்கிரு.ர்.