பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாருங்கள் பார்க்கலாம் 156 பரவைநாச்சியார் கோயில் சின்னக் கோயில் தான். ஆணுல் அதுதான் சுந்தரரை ஆரூரில் காதற் சிறைப்படுத்திய இடம் என்பதை எண்ணி மனம் உருகியது. H சுந்தரமூர்த்தி நாயனர் ஒரு சமயம் விருத்தா சலத்தில் இறைவன் வழங்கிய பொன்னேப் பெற்ருர். ‘சுவாமி, இந்தப் பொன்னே மணிமுத்தா நதியில் போடுகிறேன்; திருவாரூரில் கமலாலயத்தில் இதை வருவித்துக் கொடுக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். அவருடைய தோழனுகிய இறைவன் ஒப்புக்கொண்டான். அப்படியே திருவாரூர்த் திருக்குளமாகிய கமலா லயத்தில் வந்து அவர் தேடினர். "ஆற்றிலே போட் டுக் குளத்தில் தேடுகிறமாதிரி' என்று ஒரு பழமொழி வழங்குகிறதே; அது இந்தச் சரித்திரத்தினடியாகப் பிறந்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. சிறிது நேரம் பொன் கிடைக்கவில்லே. கரையில் பரவை நாச்சியார் நிற்கிருர். சுந்தரர் குளத்தில் தேடுகிருர். நாச்சியார் குறும்புப் பார்வை பார்க்கிருர், 'சுவாமி! என்னே ஆபத்தில் மாட்டி வைக்க வேண்டாம். இவளுக்குமுன் என்ன அவமானப் படுத்தாதே' என்று பாட்டுப் பாடினுர். உடனே பொன் கிடைத்து விட்டது. அதை எடுத்து மாற்றுச் சரியாக இருக்கி றதா என்று அங்கே உரைத்துப் பார்த்தாராம். அந்த இடத்தில் மாற்றுரைத்த விநாயகர் என்ற பிள்ளே யார் இருக்கிருர், மாற்றுரைத்த கதையைச் சொல்லா மற் சொல்லிக்கொண்டு கமலாலயத்தின் வடகிழக்கு மூலையில் அந்தப் பிள்ளையார் இன்றும் கோயில் கொண்டிருக்கிருர், -