பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 பரவையார் ஊர் திருக்கோயிலில் வெளிப் பிரா கா ர த் தி ல் தேவாசிரய மண்டபம் இருக்கிறது. அதை ஆயிரக் கால் மண்டபம் என்று சொல்கிருர்கள். அது மண்டபமாக, மேற்கூரையோடு இல்லை. வேண்டும் போது காவணம் அமைத்துக்கொள்ளும்படி வரிசை யாகக் கல் தூண்கள் நிற்கின்றன. உற்சவ காலங் களில் அவற்றின்மேல் பந்தலே அமைப்பார்கள். இத் திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமானத் தரிசிப்பதற்காகத் தேவர்களெல்லாம் வந்து எப் போதும் காத்திருக்கும் இடம் என்று இதன் பெருமை யைக் கூறுவர். தேவர்கள் ஆசிரயித்து இருப்பதால் இதற்குத் தேவாசிரயன் என்ற பெயர் வழங்குகிறது. பழங்காலத்தில் திருக்கூட்டத்தினர் வந்து தங்கி இறைவனைத் தியானித்திருக்கும் இடம் இது சேக்கிழார் திருவாரூர்ச் சிறப்பை மற்றக் காவியப் புலவர்களைப் போலச் சொல்லவில்லை. அதில் அவர் ஒரு புதுமையைப் புகுத்தி யிருக்கிருர். நகரத்தின் சிறப்பைச் சில பாடல்களால் சொல்லிவிட்டு அங்கே நிகழ்ந்த பழைய கதை ஒன்றை எடுத்துச் சொல் கிறர். மனுநீதிச் சோழனுடைய மனமுருக்கும் வரலாற்றைச் சொல்லித் திருவாரூர்ச் சிறப்பை மிகமிக உயர்த்திவிடுகிறர். அடிக்கடி விமான விபத்துக்களைப் பற்றிய செய்தி களைப் பத்திரிகையிலே பார்க்கிருேம். பெரிய நகரங் களில் மிகப் பெரிய கார் விபத்தாக இருந்தால் செய்தி பத்திரிகையில் வருகிறது. பெரிய மனிதர்களின் சம்பந்தம் இருந்தால் படங்களுடன் செய்தி வந்துவிடு கிறது; பெரிய மனிதர்கள் குற்றவாளியாக இருந்தால்