பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாருங்கள பார்க்கலாம் is& வருவதில்லை; விபத்தினுல் சேதம் அடைந்தவர் களானுல்தான் வரும். ஏழை எ ளி ய வ ர் க ள் எத்தனையோ பேர்கள் விபத்துக்கு ஆளாகிருர்கள். அவர்கள் உயிரைப் போக்கியவர்களுக்குச் சிலநாட் கள் சிறை வாசம், அல்லது அபராதம் கிடைக்கிறது. அதுவும் இன்றி, செத்துப் போனவர்கள் அறிவின்மை யினுல் வண்டிக்குக் குறுக்கே வந்து மாய்ந்தார்கள் என்று தீர்ப்பாகிற விபத்துக்களும் பல உண்டு. பழைய காலத்தில் ஒரு வீதியில் ஏற்பட்ட விபத்தைப் பற்றிய கதைதான் மனுவின் வரலாறு. மனுவின் குமாரன் வீதியிலே தன் தேரை ஒட்டிக் கொண்டு போனன். அப்போது தேர் ஒரு பசுவின் கன்றின்மேல் ஏற அது உயிர் இழந்தது. உயிர் இழந்த கன்றின் தாயாகிய பசு அரண்மனையின் வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம் பினுல் தாக்கி முறையிட்டது. மனுச்சோழன் விசாரிக்கவே, அமைச்சன் ஒருவன் அரச குமாரனைத் த ப் புவி க்க வேண்டுமென்ற எண்ணத்தால், நடந்ததை லேசாகச் சொன்னன். - "உங்கள் புதல்வன் அரச வீதியிலே வழக்கம் போல் தேரில் போனன். அதில் மணிகள் கட்டி யிருந்தன. நெடுந்துாரத்தில் வரும்போதே தெரியும் படி உயர்ந்துள்ள தேர் அது. அந்தத் தேருக்கு முன்னும் பின்னும் தேர் மேல் பலர் சென்றனர். சேனைகள் சென்றன. ஏதோ ஒரு கன்றுக்குட்டி எப்படியோ வந்து அந்தத் தேர்ச் சக்கரத்தில் புகுந்து செத்துப் போயிற்று. அதனுல் தாய்ப் பசு மணியை அடிக்கிறது” என்று சொன்னுன் அரச குமாரன்