பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வாருங்கள் பார்க்கலாம் உள்ள அறையைக் காட்டினர்கள். வருகிறவர் களுக்கு எதையாவது காட்ட வேண்டும் என்பதற் காகச்சுட்டிக்காட்டுகிருர்களேயன்றி, அவர்களுக்குத் திட்டமாக இதுதான் என்று எப்படித் தெரியும்? தமிழ் விரகராகிய ஞானசம்பந்தர் பிறந்த இடத்தில் உள்ள வீடு யாரோ குடியிருக்கும் வீடாக இருக்கிறதை எண்ணி மனம் வெதும்பியது. சீகாழித் திருக் கோயிலுக்கு உள்ள பெருமை அந்த இடத்துக்கும் உண்டு. ஆல்ை சீகாழி சிய்யாழியாக மாறி நிற்பதைப் பார்த்துச் சும்மா இருக்கும் தமிழுலகந்தானே இந்த இடத்தை இப்படி வைத்திருக்கிறது? நாட்டுக்கு விடுதலை கிடைத்தும் அந்த வீட்டுக்கு விடுதலே கிடைக்கவில்லை. அந்த வீட்டுக்கு முன்னே நின்றேன். என்னுடன் வந்திருந்த அன்பர்கள் படம் எடுத்தார்கள். ஞான சம்பந்தருடைய நினைவைக் காட்டும் ஏதாவது ஒன்று அங்கே கிடைக்காதா என்று எண்ணி அங்கும் இங் கும் பார்த்தேன். அது கற்கோயிலாக இருந்தால் கல் வெட்டு இருக்கிறதா என்று தேடலாம். வெறும் செங்கல்விட்டில் என்ன கிடைக்கும்? ஒன்றும் இல்லை. அவர் பாடியதேவாரம்கூட அந்த வீட்டில் இப்போது இருக்காதே! எத்தனே பெரியவர்கள் அவ்விடத்துக்கு வந்திருக்க வேண்டும்! எத்தனை முடிமன்னர்கள் அங்கே வந்து தம் முடி தாழ்த்தி வணங்கியிருக்க வேண்டும்- இப்படி என் கற்பனையில்ை அதைப் பெரிய வீடாக எ ண் ணி நின்றேன். இந்தக் காலத்துக்கு வந்து பார்த்தபோது அது அழகு அழிந்த சிறிய ஒட்டு வில்லே வீடாகத்தான் நின்றது.