பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#66 வாருங்கள் பார்க்கலாம் 'திருவாரூரில் பிறக்க முத்தி என்று ஒரு பழ மொழி வழங்குகிறது. இவ்வூரில் பிறந்தவர்களுக்கு யமனுடைய தண்டனை இல்லையாம். திருவாரூரில் வாழ்பவர்கள் எ ல் லோ ரு மே சிவகணங்களாகத் தோற்றமளித்தார்களாம். அதனுல்தான் சுந்தரமூர்த்தி சுவாமிகள், “திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்று பாடினர். பொதுவாக நவக்கிரகங் களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசையை நோக்கிக் கொண்டிருக்கும். இத்தலத்தில் அவை எல்லாம் வரிசையாக இருக்கின்றன. இந்தத் த ல த் ைத. அடைந்து வழிபட்டவர்களுக்குக் கிரகங்களால் துன் பம் உண்டாகாது என்ற குறிப்பை இந்த நிலை காட்டு கிறது. திருவாரூரில் பிறந்தவர்களுக்கு ய ம வே த இன இல்லை என்பதை வேறு ஒரு வகையிலும் நினைப் பூட்டும் சந்நிதி ஒன்று இங்கே இருக்கிறது. எல்லாக் கோயில்களிலும் சண்டேசர் இருக்கும் இடத்தில் இங்கும் ஒரு விக்கிரகம் இருக்கிறது. ஆல்ை அவர் வழக்கமான சண்டேசமூர்த்தி அல்ல. சடையுடனும் முழங்காலில் முகம் வைத்தபடியும் அமர்ந்திருக்கும் ஒர் உருவத்தைத்தான் காணலாம். அவன் யார் தெரி யுமா? அவன்தான் யமன். அவனுக்கு வேலை இல்லை. அதனுல் இங்கே முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிருன். சிவபெருமான் அவ னுக்கு இரங்கி இங்கே சண்டேச பதவியை வழங் கிரைாம். - கோயிலின் உள்பிராகாரத்தில் தனித்தனியே பல கோயில்கள் இருக்கின்றன. கட்டு மலையின்மேல் ஒரு கோயில்; அதற்கு அருணுசலேசம் என்று பேர்