பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł63 வாருங்கள் பார்க்கலாம் கட்டளை என்ற அமைப்பும் அதற்குரிய மடமும் திருவாரூரில் இருக்கின்றன. வெளிப்பிராகாரத்தைக் கடந்து இடைநிலைக் கோபுரத்தின் வழியே சென்ருல் அந்த இடை கழியிலே தெற்குப் பக்கத்தில் வடக்கு நோக்கி அமர்ந் திருக்கும் திருவுருவம் ஒன்றைப் பார்க்கலாம். அவர் விறன்மிண்ட நாயனுர். அவருக்கு இறைவனிடம் உள்ள அன்பைக் காட்டிலும் அடியார்களிடம் உள்ள அன்பு மிகுதி. அடியார்களிடம் அன்பு இல்லாதவர் என்ருல் அத்தகையவரைக் காணவும் சகியாதவர் அவர். சுந்தரமூர்த்தி நாயனுர் திருவாரூர்த் திருக்கோயி லுக்குள் போகும்போது தேவாசிரய மண்டபத்தில் உள்ள அடியார்களேத் தரிசனம் செய்து கொள்ளாமல் போளுர், அதனுல் விறன்மிண்டருக்கு அவரிடம் கோபம் உண்டாயிற்று. அவரைப் புறகு என்று சொல்லி விலகினர். அத்தகையவரை ஆட்கொண்ட ஆரூர்ப் பெருமானும் புறகு என்று இருந்து, பிறகு இறைவன் திருவருளேப் பெற்ருர். இந்த அளவில் தான் அவருடைய கதை பெரியபுராணத்தில் இருக் கிறது. ஆனுல் அவரைப் பற்றிய வேறு கதை ஒன்றைத் திருவாரூரில் ஓர் அன்பர் சொன்னர். பெரிய புராணத்தில் காணுத பல கதைகள் அந்த அந்த இடங்களில் வழங்குகின்றன. அவற்றையெல் லாம் தொகுத்துப் பார்த்தால் பல அரிய செய்திகள் புலனுகும். நான் கேட்ட கதையைச் சொல்கிறேன். "இவரைச் சாமான்ய மக்கள் என்ன பெயரிட்டு வழங்குகிருர்கள், தெரியுமோ?' என்று அன்பர் கேட் 'டார்.