பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 வாருங்கள் பார்க்கலாம் அதை வற்றச்செய்தாராம். பரவையை உண்ட மண் தளியாதலால் பரவையுண் மண்டளி என்று பெயர் வந்ததாம். இப்படிப் புராணம் சொல்கிறது. இப்போது இது மண் தளியாக இல்லாமல் கல் தளியாகவே இருக்கிறது. இங்குள்ள பெருமானுக்குத் தூவாயர் என்று திருநாமம். துர்வாசேசுவரர் என்பது வடமொழி நாமம். சுந்தரமூர்த்தி நாயனர் திருவொற்றியூருக்கு வந்: தார். அங்கே திருக்கோயிலில் மாலே கட்டும் திருப் பணியில் ஈடுபட்டிருந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டபோது அவர்பால் காதல் உண்டாயிற்று. நாச்சியாரைக் கல்யாணம் செய்துகொள்ள நிச்சயித் தார். "என்னே விட்டுப் பிரியாமல் இருந்தால் திருமணம் செய்து கொள்வேன்' என்று சங்கிலி நாச்சியார் சொல்லவே, நாயனர் ஒப்புக்கொண்டார். இறைவனுடைய சந்நிதியில் உறுதிமொழிகூறவேண் டும் என்று நாச்சியார் கூறவே, அப்படியே செய். வதாகச் சுந்தரர் கூறினர், தாம் உறுதிமொழி கூறும்போது மகிழ மரத்தடியில் சென்று இருக்க வேண்டும் என்று அவர் இறைவனிடம் விண்ணப் பித்துக் கொண்டார். இறைவன் அவ்வாறே செய்வ. தாக அருளி விட்டுச் சங்கிலியார் கனவில், தான் மகிழ மரத்தடியில் இருக்கப் போவதாகவும், அம். மரத்தடியில் உறுதிமொழி வழங்கும்வண்ணம் சொல் லும்படியும் அருளினுன். சங்கிலியார் அப்படியே சுந்த ரரிடம் சொல்ல, வேறு வழியில்லாமல் அவர் ஒப்புக் கொண்டார். திருமணம் இறைவனருளால் நிறைவேறியதுசில நாட்கள் ஆன பிறகு சுந்தரருக்குத் திருவாரூர்