பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகுப் பயணம் 179 வாழ்ந்திருந்த 12-ஆம் நூற்ருண்டில்கூட அது தமிழ் நாடாகவே இருந்திருக்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமி கள் இரண்டு முறை கொடுங்கோளுர் போய் வந்திருக்கிருர், அவ்வளவு ஒட்டுறவோடு இருந்த பகுதி இப்போது விசாரித்தாலும் விவரம் தெரியாத இடமாகிவிட்டது. திருச்சூர் வழியாகக் கொடுங்கோளுர் செல்ல லாம் என்று எண்ணியிருந்தபோது இறைவன் திரு வருள்போல எனக்கு எர்ணுகுளத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. எர்ணுகுளத்தில் ஒரு தமிழ்ச்சங்கம் இருக்கிறது. தமிழன் எங்கே சென்று வாழ்ந்தால் என்ன, தமிழை மறக்க முடியுமா ? எர்ணுகுளம் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் திரு நாகப்பன் என்ற இளைஞர் தமிழன்பும், தெய்வபக்தியும், நல்லொழுக்க மும் உடையவர். அவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி ர்ை. இந்தக் கடிதம் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் எழுதியிருக்கலாம் ; அல்லது இரண்டு மாதங்களுக்குப் பிறகு எழுதியிருக்கலாம் ; நான் திருவஞ்சைக்களத்துக்குப் போக வழி விசாரித்துக் கொண்டிருக்கிற சமயத்தில் அவர் கடிதம் வந்தது ; அதைத் திருவருட் செயல் என்று சொல்வதைவிட வேறு எப்படிச் சொல்வது ? அன்பர் நாகப்பன், என்னே எர்ணுகுளத்துக்கு வந்து திருவெம்பாவையைப் பற்றி ஒரு சொற்பொழிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கடிதம் எழுதி யிருந்தார். அவர் குறிப்பிட்ட நாளில் என்னுல் போக இயலவில்லை. ஆலுைம் மலைநாட்டில் ஒரன்பர் பழக்கம் ஏற்பட்டது பற்றி மனமகிழ்ந்து அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். "நான் திருவெம்பாவை