பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படகுப் பயணம் $89 வில்லை. கழியில் காலே நேரங்களில் தண்ணிர் சிறிது வடியும். திருவஞ்சைக் களத்துக்கு ஒரு கிளேக் கழி யில் போக வேண்டும். அதில் ஆழம் போதாமை யால் நேரே கொடுங்கோளுருக்குப் போனுேம். 12 மணிக்கு மேல் கடல் ஒதம் மல்குமாகையால் திரு வஞ்சைக்களத்துக்குப் போவது எளிதாக இருக்கும் என்று படகுக்காரர் சொன்னர். கொடுங்கோளுர்தான் சேரமான் இருந்த இடம். திருவஞ்சைக்களம் அவ் விராசதானியில் உள்ள கோயில். ஆகவே சேரமான் ஊருக்குப் போய்விட்டு அங்குள்ள ஆலயத்துக்குப் போவதும் ஒரு வகையில் முறைதான் என்று எண்ணி னுேம். பன்னிரண்டு மணிக்குக் கொடுங்கோளுரை அடைந்தோம். படகுப் பிரயாணத்தின் இன்பத் தால் ஊக்கம் பெற்றுக் கொடுங்கோளுர்த் தரையில் கால் வைத்தோம்.