பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 வாருங்கள் பார்க்க்லாம் "அங்கே என்ன விசேஷம்?’ என்று கேட்டேன். சேரமான் பெருமாள் அரண்மனை இருந்த இடம் அது. அந்த இடத்தைச் சேரமான் கோயிலகம் என்று சொல்வார்கள்’’. - நாங்கள் சேரமான் பறம்பை நோக்கிச் சென் ருேம், வெயில் கொளுத்தும் அந்த வேளையில் நடந்தோம். திருவஞ்சிக்குளத்துக்குத் தெற்கே ஒரு பர்லாங்கு நடந்து சேரமான் பறம்பைக் கண்டோம். அங்கே வெறும்பொட்டல்வெளி இருக்கிறது. அரசாங் கத்தார் ஒரு கூம்பு போன்ற கட்டிடத்தை எழுப்பி அதில் ஒரு கல்லேப் பதித்திருக்கிருர்கள். சேரமான் பறம்பு; சேரமான் பெருமாள் அரண்மனை இருந்த இடம்' என்று ஆங்கிலத்திலும், 'சேரமான் பறம்பு’ என்று மாத்திரம் மலேயாளத்திலும் அந்தக் கல்லில் பொறித்திருத்கிருர்கள். நாங்கள் காலேயில் கழியில் வந்தபோது, "இதோ இங்கேதான் சேரமான் அரண்மனை, கோட்டை எல்லாம் இருந்தன' என்று கழிக்கரையில் இருந்த இடிபாட்டை உடன் வந்தவர்கள் காட்டினர் கள். அந்த இடத்தைக் கிருஷ்ணன் கோட்டை என்றும் கோட்டைமுக்கு என்றும் வழங்குகிருர்கள். அதற்கும் நாங்கள் இப்போது பார்த்த சேரமான் பறம்புக்கும் சிறிது தூரம் இருக்கும். கோட்டை முதலியவை விரிவாக இருந்திருக்க வேண்டுமென்று தோற்றியது. சேரமான் பறம்பைப் பார்த்துவிட்டுத் திருவஞ்சிக் குளத்தில் உள்ள ஆலயத்துக்குச் சென்ருேம். போகும் வழியில் கோயிலைச் சார்ந்த தீர்த்தம் ஒன்று