பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானக் குழந்தை பிறந்த ஊர் 13. புரேசர் சந்நிதி இருக்கிறது. அம்பிகையின் கோயில் பிரம தீர்த்தக் கரையில் அதற்கு மேற்கிலும் பிரம புரீசர் கோயிலுக்கு வடக்கிலும் இருக்கிறது. இந்த இரண்டு கோயில்களுக்கும் இடையில் திருஞான சம்பந்தர் கோயில் இருக்கிறது. திருஞான சம்பந்தருடைய உற்சவ விக்கிரகம் பிரமபுரீசர் கோயிலுக்குள், சந்நிதிக்குத் தெற்கே இருக்கிறது. இடக்கையில் பால் கிண்ணமும் வலக் கையில் சற்றே நீட்டிய சுட்டு விரலும் உடைய கோலத்தில் ஞானசம்பந்தர் காட்சி தருகிருர். பால் குடித்த இன்ப நிலையில் இருப்பதை முகபாவம் நன் ருகக் காட்டுகிறது. இந்தத் திருவுருவைப் பார்த்தால் மிக மிகப் பழங்கால முதல் வழிபடப் பெற்றது என்பது தெரியவரும். - இங்கே சித்திரை மாதம் பிரமோற்சவம் நடை பெறும். எல்லாக் கோயில்களிலும் நடைபெறுவது போல ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் சிவபெருமான் எழுந்தருளுவார். திருத்தேர் விழாவும் நடைபெறும், அந்த உற்சவத்தின் இடையில் இரண் டாம் நாள்தான் இந்தத் திருக்கோயிலுக்கே உரிய சிறப்புத் திருவிழா நடைபெறும். தமிழ் நாட்டிலுள்ள வெவ்வேறு ஊர்களிலிருந்து அந்த விழாவைப் பார்க்க அன்பர்கள் வந்து கூடுவார்கள். திருமுலேப்பால் உற் சவம் என்று சொன்னுலே போதும், பக்தர்களுக்குச் சீகாழியின் நினைப்பு வந்துவிடும். தோணியப்பரும் பெரியநாயகியும் எழுந்தருளி ஞானசம்பந்தருக்குப் பால் வழங்கும் காட்சியைக் கண்டு பக்தர்கள் மன முருகி நிற்பார்கள். ஞானசம்பந்தர் சிவிகையில் எழுந்: தருளுவார். பிரமதீர்த்தத்தின் தென்கரையில் திரு.