பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை இல்லா அப்பன் 21 تيزو சந்நிதி இருக்கிறது. நடராஜர் தெற்கு நோக்கியே: இருக்கிருர், அழகிய மூர்த்தி. அதன் பீடத்தில், "திருவஞ்சிக்குளம் சபாபதி” என்று தமிழில் எழுத் துக்கள் பொறிக்கப் பெற்றிருக்கின்றன. இந்த மூர்த்தில் சேரமான் பெருமாள் பூசை செய்த மூர்த்தி' என்று சொன்னர்கள். அவர் வழிபட்ட மூர்த்தியாக இருக் கலாம். இந்த நடனப் பிரான் கட்டுசடையை உடை யவர். விரித்த செஞ்சடையாட நடமாடும் கோலம் ஒரு வகை. கட்டிய செஞ்சடையுடன் கூத்தாடுவது. ஒரு விதம். பின்னு செஞ்சடைப் பெருமானத் தரிசித் துக் கொண்டேன். - - சில இடங்களில் சுவர்களில் அழகிய ஓவியங்: களைத் தீட்டியிருக்கிருர்கள். ருத்திர தாண்டவத்தை விளக்கும் ஓவியம் ஒன்றைப் படம் எடுத்தோம். வேறு: ஒரு பழைய ஓவியத்தை எடுக்க முடியவில்லை. திருக்கோயில்களில் பழங்காலத்தில் ஒவியங்களே எழுதுவது வழக்கம் என்பது இலக்கியங்களாலும்,. இப்போது சிதைந்து காணப்படும் ஓவியங்களாலும் புலனுகின்றது. திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயிலில் பல ஒவியங்களேத் தீட்டியிருந்த மண்டபம் ஒன்று பழங்காலத்தில் இருந்தது. எழுதெழிலம்பலம், எழுத்து நிலை மண்டபம் என்று அந்த மண்டபத்தை வழங்கினர். சங்க காலத்து நூலாகிய பரிபாடலில் இச்செய்தி வருகிறது. காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் பழைய' சித்திரங்களின் சிதைவை இன்றும் காணலாம். படத்தில் எடுக்க முடியாத பழைய ஓவியத்தில் இருந்த வண்ணங்கள் இன்னும் பொலிவுடன்