பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 வாருங்கள் பார்க்கலாம் அதற்குத்தான் கேசவதிர்த்தம், விஷ்ணு தீர்த்தம் என்று பெயர் சொல்கிருர்கள். . "மாணிக்கவாசகர் கோயில் தனியே இருக்கிற தாமே ; அங்கேயும் போகவேண்டும்' என்றேன். அவசரப்படாதீர்கள். எல்லாம் ஒவ்வொன்ருகப் பார்க்கலாம்” என்ருர் பட்டர் விஷ்ணு தீர்த்தக் கரை வழியே சென்றேன். நீருக்குள் ஓரிடத்தில் இரண்டு கற்கம்பங்களின்மேல் ஒரு பெரிய கல் விட்டமும் அதன்மேல் ஒரு பிம்பமும் இருப்பதைக் கண்டேன். முகம் மாத்திரம் முனிவர் முகம், உடம்பு விலங்கின் உடம்பு. அது புருஷாமிருகத்தின் உருவம். பாரதத் தில் ஒரு புருஷாமிருகம் வருகிறது. தர்மபுத்திரர் ராஜ சூய யாகம் செய்வதற்கு முன் யாக பூமியைத் தெரிந் தெடுத்தார். அதைத் தூய்மைப்படுத்த எண்ணித் தம் இளவலாகிய பீமன அழைத்துப் புருஷா மிருகத்தை வருவிக்கச் சொன்னுர், அப்படியே பீம னுடைய விருப்பத்தின்படி அது வேள்வி நிலத்துக்கு வந்து அதைத் தூயதாக்கியது. புருஷாமிருகம் சில் பக்தி நிரம்பியது. புருஷாமிருக தீபம் என்பது சிவா லயங்களில் உள்ள தீபங்களில் ஒன்று. கல்விட்டத்தின்மேல் இருந்த புருஷாமிருகத்தைக் கண்டேன். அது அந்தத் தீர்த்தத்துக்குக் காவலாக நிற்கிறது. அதன் கீழுள்ள கற்கம்பங்கள் தண்ணீரின் மட்டத்தைக் காட்டும் வகையில் இருக்கின்றன. அப்போது பலரைக் கேட்டும், பின்பு வடமொழி வாதவூர் மாகாத்மியத்தின் மொழிபெயர்ப்பைப் படித் தும் அந்தப் புருஷாமிருகத்தைப் புற்றிய செய்திகளே நீர்ன்தெரிந்து கொன்ட்ேன்.