பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22: வாருங்கள் பார்க்கலாம் தில் ஒரு நடைவாவி இருக்கிறது ; அதற்குப் பொற்ருமரை என்று பெயர். வைரவ தீர்த்தம் என்று புராணம் அதற்குப் பெயர் வைத்திருக்கிறது. உள் பிராகாரத்தில் தென் பக்கத்தில் ஒரு கிணறு உண்டு. அது. கபில தீர்த்தம். கோயில் கிழக்கே நோக்கியது. கோபுரம் முன்னே இருக்கிறது. இரண்டு பிராகாரங்கள். வெளிப் பிராகாரத்தில் தென் பக்கத்தில் இந்தத் தலத்தின் விருட்சமாகிய மகிழ மரம் இருக்கிறது. அதற்கு அருகில்தான் முன்னே சொன்ன பொற்ருமரைத் தீர்த்தம் இருக்கிறது. வலப்பக்கத்தில் நூற்றுக்கால் மண்டபம் ஒன்று இடிந்து கிடக்கிறது. "இங்கே தான் முதலில் நடராஜர் எழுந்தருளியிருந்தார், மாணிக்கவாசகரே இம் மண்டபத்தைக் கட்டினுராம். அவருக்கு நடராஜப் பெருமான் தம் பாதச் சிலம்பின் ஒலியைக் கேட்கும்படி திருவருள் செய்தாராம். வாத ஆரினில் வந்தினி தருளிப், பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் என்று திருவாசகத்தில் மணி வாசகப் பெருமான் அதைப்பற்றிப் பாடியிருக்கிருர்...' விஷயம் தெரிந்த ஓர் இளைஞர் ஒவ்வொன்ருகச் செய். தியைச் சொல்லிக் கொண்டு வந்தார். நம்பி திருவிளையாடல் என்ற பழைய திருவிளை யாடற் புராணத்தில் இரண்டு இடங்களில் இந்தச் சிலம்பொலி வருகிறது. சோதிசேர் வகுண கீழற் சிலம்பொலி துளங்கக் காட்டும் வேதகா யகளுர் வாழும் வியன்றிரு வாதவூ ரால்