பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூர் 217' தொன்னெறி முனிவ ராம்ஆ மாத்தியர் தொழுகு லத்து கன்னெறி விடையிற் போந்தோர் கன்கணத் தலைவர் காமம் இன்னெறி வாத ஆரர் என்னவங் துதயம் செய்தார் என்று பழைய திருவிளையாடல் கூறுகிறது. சிவ கணத்தில் ஒருவரே மாணிக்க வாசகராக அவதாரம் செய்தார் என்பது அந்நூலாசிரியர் தெரிவிக்கும் செய்தி. அவர் நந்தியெம்பெருமானின் திருவவதாரம் என்றும் சொல்வதுண்டு. வடமொழியில் உள்ள மணிவாக்ய சரிதம் என்ற நூல் அவ்வாறு சொல் கிறதாம். - மணிவாசகப் பெருமான் அவதாரம் செய்த ஊர் சிறந்த ஊர். தீர்த்தச் சிறப்புள்ள ஊர். அவர் யாருடைய அவதாரம் ? இந்தக் கேள்விக்கு விடை காணவேண்டுமானுல் ஒரு பெரிய வாதம் எழும். மாணிக்கவாசகர் மூவருக்கு முற்பட்டவரா, பிற்பட்ட வரா ?-இது அதைவிடப் பெரிய வாதம். ஆணுல். இதுதான் அவர் பிறந்த இடம் என்பதில் எந்த வாதமும் இல்லை. அந்த வாதமில்லா ஊர் வாதவூர் மட்டுமன்று : வேதவூர்கூட !