பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை ஒவியங்கள் 239. மதுரைக்குப் புதிதாகப் பெருமை வரவேண்டும் என்பது இல்லே. அதன் பெருமையைப் புதிதாக நூலெழுதிப் பரப்ப வேண்டுமென்ற அவசியமும் இல்லை. அப்படி அதன் பெயர் காவியத்திலும் ஒவியத்திலும் பல காலமாக இடங்கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. மாணிக்கவாசகர் பல ஆண்டுகள் வாழ்ந்த நகரம் ஆதலால் இப்போது அதைப்பற்றிச் சொல்லும் சந்தர்ப்பம் வந்திருக்கிறது. அவர் திருவவதாரம் செய்த திருவாதவூரைத் தரிசனம் செய்துகொண்டு சூட்டோடு சூடாக மதுரைக்கு முதல் முறையாக வந்து திருக் கோயிலேத் தரிசிப்பதாக எண்ண வேண்டாம். எத்தனையோ முறை மதுரை மீனுட்சி யம்மையையும் சொக்கநாதனையும் வழி பட்டிருக் கிறேன். ஆனல் இப்போது மாணிக்கவாசகரை முன்னிட்டுக்கொண்டு ம து ைர க் கோயிலே அணுகினேன். பாண்டியன் அரண்மனே இருந்த இடம் இன்னதென்று இப்போது தெரிந்துகொள்ள இயலாது. அரசனது அரண்மனைக்கே அடையாளம் இல்லையென்ருல் அமைச்சராகிய வாதவூரர் வாழ்ந்த இடம் எங்கே தெரியப்போகிறது ? பழங்கால மன்னர்கள் தாம் வாழப் பெரிய பெரிய அரண்மனைகளைக் கட்டிக்கொள்ளவில்லை. சிவ பிரானுகிய அரனுக்கு மனே கட்டினர்கள். தாம் வாழ ஏதோ ஒரு வகையில் மாளிகை கட்டிக்கொண்டிருக் கலாம். "இடம்பட வீடு இடேல்" என்பது ஒளவைப் .பாட்டியின் ஆணே. இறைவன் திருக்கோயிலுக்கு மேற்பட்ட வகையில் மாடமோ மாளிகையோ கட்டுவது பழங்காலவழக்கம் அன்று. ஆகையால் சிறி