பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை ஒவியங்கள் 249 கட்டுவதற்கும் தண்ணிர் காட்டுவதற்கும் ஏற்ற அமைப்புகளைச் செய்யும்படி மன்னனிடம் சொன்னர். அவ்வாறே அவன் செய்தான். மூன்று நாட்கள் ஆயின. குதிரைகள் வரவில்லை. பாண்டியன் பொறுமையை இழந்தான். இவர் நம்மை ஏமாற்றுகிருர், இவரைத் தக்கபடி தண் டித்து, எடுத்துப் போன நிதியை மீட்டுத் தரும்படி செய்யுங்கள்’ என்று தண்டம் செய்வாரை அனுப்பி ன்ை. அவர்கள் மாணிக்கவாசகரை அணுகி, 'பொன்னுக்கு வழி சொல்லும்' என்று சொல்லி அவர் முதுகில் கல்லேற்றி வைத்தார்கள். கையிலும் காலி லும் கிட்டி கட்டினர்கள். அப்போதெல்லாம் அந்த மெய்ஞ்ஞானி இறைவனேயே எண்ணியிருந்தார். பின்பு இரவு வரவே அவரைக் காவலாளர் சிறையில் அடைத்துவிட்டுச் சென்ருர்கள். இரவெல்லாம் அங்கே கிடந்த அவர் விடிந்தவுடன் திருக்கோயிலில் பூசை நடக்கும் ஒலியைக் கேட்டார். உடனே இறை வனே நோக்கிப் புலம்பினுர். யமன் செய்யும் கொடு மையிலும் மிக்க கொடுமையினுல் நான் வருந்து வதைக் காணவில்லையோ ! என் முறையீட்டைக் கேட்கவில்லையோ ! நீ எங்கும் செவியுடையவனு: யிற்றே!' என்று நைந்தார். பொங்கும் சினமடங்கல் போன்றுருத்து வெங்கூற்றம் அங்குப் புரியா அருந்துன்பத் தாழ்ந்துநான் மங்கும் படியறிந்தும் வந்தஞ்சல் என்கிலேயால்; எங்கும் செவியுடையாய்! கேளாயோ, என்னுரையே ?