பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுகந்த மதுரை § காதுரை மாநகரம் முழுவதும் இதுவே பேச்சு; பாண்டிய மன்னன் எத்தனே செலவு செய்தாலும் கிடைக்காத குதிரைகள் அவனுக்குக் கிடைத்திருக் கின்றன என்று யாவரும் வியந்தார்கள். பாண்டி நாட்டையே விலையாகக் கொடுத்தாலும் அத்தகைய குதிரைகள் கிடைக்கும்ா? என்ன அழகான குதிரை கள்! கம்பீரமான குதிரைகள்! இறைவன் தம்மைக் கைவிடாமல் காப்பாற்றி ஞன் என்று மாணிக்கவாசகர் அவனே நிஜனந்து உரு கிஞர். நாம் கொண்டுபோன பொருள் முழுவதை யும் அன்பர்களும் தானும் ஏற்றுக்கொண்டு, நம்மை யும் ஆட்கொண்டு துன்பத்தைத் தீர்த்தான். மிகவும் சிறந்த குதிரைகளேக் கொணர்ந்து வழங்கி அரசனுக் கும் மகிழ்ச்சி பெருகும்படி செய்தான். இனி நமக்கு யாதொரு கவலையும் இல்லை. அவனுடைய திருவரு ளால் இன்ப அநுபவம் பெறுவதற்கு ஏற்றபடி தவம் செய்யும் நிலையை நமக்கு இனி அருள வேண்டும் என்று எண்ணி இன்புற்ருர், பாண்டிய மன்னனும் மதுரைமா நகரத்தாரும் மந்திரியினுடைய முயற்சியால் அழகான குதிரைகள் வந்தன என அவரைப் பாராட்டிக் கொண்டிருந்தார் கள், அன்று பகலில் இவ்வாறு எங்கும் மகிழ்ச்சி ஆரவாரமே நிறைந்திருந்தது.